பந்தன் பேங்க் லாபம் ரூ.103 கோடி.. வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 2.30 கோடியை தாண்டியது..

பந்தன் பேங்க் லாபம் ரூ.103 கோடி.. வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 2.30 கோடியை தாண்டியது..

2021 மார்ச் காலாண்டில் பந்தன் பேங்க் லாபமாக ரூ.103 கோடி ஈட்டியுள்ளது.

தனியார் துறையை சேர்ந்த பந்தன் பேங்க் தனது கடந்த மார்ச் காலாண்டு நிதி முடிவுகளை வெளியிட்டுள்ளது. 2021 மார்ச் காலாண்டில் பந்தன் பேங்க் லாபமாக ரூ.103 கோடி ஈட்டியுள்ளது. இது சென்ற ஆண்டின் இதே காலாண்டைக் காட்டிலும் 80.1 சதவீதம் குறைவாகும். 2020 மார்ச் காலாண்டில் பந்தன் பேங்க் லாபமாக ரூ.517.3 கோடி ஈட்டியிருந்தது.

பந்தன் பேங்க் லாபம் ரூ.103 கோடி.. வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 2.30 கோடியை தாண்டியது..
பந்தன் பேங்க்

2021 மார்ச் காலாண்டில் பந்தன் பேங்கின் நிகர வட்டி வருவாய் ரூ.1,757 கோடி ஈட்டியுள்ளது. இது 2020 மார்ச் காலாண்டைக் காட்டிலும் 4.6 சதவீதம் அதிகமாகும். கடந்த மார்ச் காலாண்டில் பந்தன் பேங்கின் மொத்த வாராக் கடன் 0.31 சதவீதம் குறைந்து 6.81 சதவீதமாக குறைந்துள்ளது. நிகர வாராக்கடன் 1.15 சதவீதம் உயர்ந்து 3.51 சதவீதமாகவும் உயர்ந்துள்ளது.

பந்தன் பேங்க் லாபம் ரூ.103 கோடி.. வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 2.30 கோடியை தாண்டியது..
பந்தன் பேங்க்

பந்தன் பேங்க் கடந்த மார்ச் காலாண்டில் புதிதாக 5 லட்சம் வாடிக்கையாளர்களை பெற்றுள்ளது. கடந்த மார்ச் இறுதி நிலவரப்படி பந்தன் பேங்கின் மொத்த வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 2.3 கோடியாக உள்ளது. மும்பை பங்குச் சந்தையில் நேற்று பங்கு வர்த்தகம் நிறைவடைந்தபோது பந்தன் பேங்கின் பங்கு விலை முந்தைய வர்த்தக தினத்தை காட்டிலும் 1.71 சதவீதம் குறைந்து ரூ.291.05ஆக குறைந்தது.