மதிய உணவு திட்டத்தில் வாழைப்பழம் – அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்!

 

மதிய உணவு திட்டத்தில் வாழைப்பழம் – அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்!

அரசுப் பள்ளி மாணவர்களுக்கான மதிய உணவுத் திட்டத்தில் வாழைப்பழத்தை சேர்ப்பது பற்றி முதல்வரிடம் பரிந்துரைக்க உள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார்.

திருச்சியில் மாணவர்களுக்கு விலையில்லா புத்தகங்கள் வழங்கிய பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக்கல்வித்துறை அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் உட்கட்டமைப்பு வசதிகளை ஆய்வு செய்து வருகிறேன். அதற்கான அறிக்கையினை வரும் 1ஆம் தேதி முதல் முதல்வரிடம் சமர்பிக்க உள்ளேன் என்று கூறினார்.

மதிய உணவு திட்டத்தில் வாழைப்பழம் – அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்!

தொடர்ந்து பேசிய அவர், தான் சமர்ப்பிக்கவுள்ள ஆய்வறிக்கையில் மாணவர்களின் மதிய உணவு திட்டத்தில் வாழைப்பழம் சேர்ப்பது குறித்தும் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை உயர்த்துவது குறித்தும் இடம்பெறும் என்று தெரிவித்தார். வாழை விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில் முதல்வரிடம் இதனை பரிந்துரைக்கும் உள்ளதாகவும் கிராமப்புற பள்ளிகளில் குடிநீர்த் தேவைக்கான பணியாளர்களை நியமிப்பது குறித்து முதல்வரிடம் பரிந்துரைக்க உள்ளதாகவும் அமைச்சர் அன்பில் மகேஷ் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.