‘தி பேமிலி மேன் 2’ தொடரை தடை செய்க : தமிழக அரசு

 

‘தி பேமிலி மேன் 2’ தொடரை தடை செய்க : தமிழக அரசு

தி பேமிலி மேன் 2 தொடரை தடை செய்யக்கோரி தமிழக அமைச்சர் மனோ தங்கராஜ் வலியுறுத்தியுள்ளார்.

‘தி பேமிலி மேன் 2’ தொடரை தடை செய்க : தமிழக அரசு

சமந்தா நடிப்பில் அமேசான் பிரைம் இணையத்தளத்தில் ‘தி பேமிலி மேன் 2’ எனும் இணையத்தொடர் வெளியாகியுள்ளது. இந்த இணையத்தொடர் தமிழர்களை வன்முறையாளர்களாகக் காட்டுகிறது என்றும் தமிழர்கள் மீதான வன்மத்தோடும் காட்சிப்படுத்தப்பட்டிருப்பது வெளிப்படையாகத் தெரிகிறது பலரும் கண்டனம் தெரிவித்தனர்.

‘தி பேமிலி மேன் 2’ தொடரை தடை செய்க : தமிழக அரசு

தி பேமிலி மேன் 2 தொடரை தடை செய்யக்கோரி தமிழக அமைச்சர் மனோ தங்கராஜ் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார். மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருக்கு தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கடிதம் எழுதியுள்ளார். ஈழத்தமிழர் போராட்டத்தை இழிவுபடுத்தும் வகையில் தி பேமிலி மேன் 2
தொடரின் முன்னோட்டம் உள்ளது. தி பேமிலி மேன் 2 தொடரின் முன்னோட்டம் தமிழக மக்களிடையே பெரும் எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது. தி பேமிலி மேன் 2 தொடர் ஒளிபரப்பானால் மாநிலத்தின் மதநல்லிணக்கத்தை காப்பது கடினமாகும் என்பதால் தொடரை தடை செய்ய வேண்டும். தி பேமிலி மேன் 2 தொடரை தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் நிறுத்தவோ தடை செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.