தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி மறுப்பு : சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி !

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி மறுப்பு  : சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி !

தூத்துக்குடியில் அமைக்கப்பட்டுள்ள ஸ்டெர்லைட் ஆலையால் சுற்றுச்சூழல் பாதிப்பு என கூறி 2018 போராட்டம் நடைபெற்றது. 2018 மே 22ல் நடந்த போராட்டத்தின் போதுநடந்த துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். இதனால் தமிழக அரசின் மாசுகட்டுபாட்டு வாரியம் உத்தரவின் பேரில் 2018 மே 28ல் ஸ்டெர்லைட் ஆலைக்கு சீல் வைக்கப்பட்டது.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி மறுப்பு  : சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி !

இந்த வழக்கை பசுமை தீர்ப்பாயத்திற்கு வேதாந்தா நிறுவனம் கொண்டு செல்ல வேதாந்தா நிறுவனத்திற்கு சாதகமாக தீர்ப்பு வந்தது. இதை எதிர்த்து தமிழக அரசு சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில் ஆலைக்கு சீல் வைக்கப்பட்டது எதிராக வேதாந்தா நிறுவனமும் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கின் வாதத்தின் போது தமிழக அரசு மக்களை சமாதானம் செய்யவே ஆலையை மூடி இருப்பதாகவும், சுற்றுசூழல் மாசுபாடு குறித்து எந்த ஆதாரமும் இல்லை என வேதாந்தா நிறுவனம் தரப்பில் வாதிடப்பட்டது.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி மறுப்பு  : சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி !

இந்நிலையில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறப்பதற்கான தடை தொடரும் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தின் நீதிபதிகள் சிவஞானம் பவானி சுப்பராயன் அமர்வு வாசித்தக் 815 பக்கங்கள் கொண்ட தீர்ப்பில் சீல் வைக்கப்பட்ட அதற்கு எதிரான ஸ்டெர்லைட் ஆலையின் மனுவை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம். இதனால் இதை எதிர்பார்த்து காத்துகிடந்த தமிழக மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்