திருவண்ணாமலையில் ஜுன் 24-ம் தேதி கிரிவலத்திற்கு தடை!

 

திருவண்ணாமலையில் ஜுன் 24-ம் தேதி  கிரிவலத்திற்கு தடை!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கிரிவலத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

திருவண்ணாமலையில் ஜுன் 24-ம் தேதி  கிரிவலத்திற்கு தடை!

தமிழகத்தில் கொரோனா காரணமாக ஊரடங்கு வருகின்ற 28ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது .அத்துடன் நோய் தொற்று பாதிப்பின் அடிப்படையில் மாவட்டங்கள் மூன்று வகைகளாக பிரிக்கப்பட்டு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. இதில் அரியலூர் ,கடலூர் ,தர்மபுரி ,திண்டுக்கல் ,கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி ,கிருஷ்ணகிரி ,மதுரை, பெரம்பலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் ,ராணிப்பேட்டை, சிவகங்கை, தேனி ,தென்காசி ,திருநெல்வேலி ,திருவள்ளூர் ,திருவண்ணாமலை, தூத்துக்குடி ,திருச்சி ,விழுப்புரம் ,வேலூர் மற்றும் விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் கொரோனா குறைந்துள்ளதால் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் பொழுதுபோக்கு இடங்கள், கோயில்கள் எதுவும் இதுவரை திறக்கப்படவில்லை.

திருவண்ணாமலையில் ஜுன் 24-ம் தேதி  கிரிவலத்திற்கு தடை!

இந்நிலையில் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் ஜுன் 24-ம் தேதி நடைபெறவுள்ள கிரிவலத்திற்கு தடை விதித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார் கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு காலத்தில் பொதுமக்கள், பக்தர்கள் யாரும் கிரிவலம் செல்ல கூடாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.ஏற்கனவே தமிழகத்தில் கொரோனாவால் ஒரு உயிர் பலி கூட இல்லை என்ற சூழல் ஏற்படும்போது தான் கோவில்கள் திறக்கப்படும் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார் . இதனால் அடுத்த மாதம் முதலே கோவில் திறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.