திருவண்ணாமலையில், பிப்.26, 27-ஆம் தேதிகளில் கிரிவலம் செல்ல தடை!

 

திருவண்ணாமலையில், பிப்.26, 27-ஆம் தேதிகளில்  கிரிவலம் செல்ல தடை!

திருவண்ணாமலை

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலில் நாளை முதல் 2 நாட்களுக்கு பௌர்ணமி கிரிவலம் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது.

இதுதொடர்பாக திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில், தமிழகத்தில் கொரோனா தாக்கம் குறைந்துள்ள போதிலும், கேரளா, தெலங்கானா மற்றும் மகாராஷ்டிராவில் நோய் பரவல் அதிகரிகத்து வருவதாக தெரிவிதுள்ளார்.

திருவண்ணாமலையில், பிப்.26, 27-ஆம் தேதிகளில்  கிரிவலம் செல்ல தடை!

இந்த நிலையில் திருவண்ணாமலை கோயிலில் கிரிவலத்திற்கு அனுமதி வழங்கினால் வெளி மாநிலங்களில் இருந்து வரும் பக்தர்கள் மற்றும் பொதுமக்களினால் மாவட்டத்தில் நோய் தொற்று அதிகரிக்கும் அபாயம் உள்ளதாகவும் ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

எனவே, நாளை வெள்ளிக்கிழமை மாலை 3.49 மணி முதல் சனி கிழமை பிற்பகல் 2.42 மணி வரை பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கிரிவலம் செல்வதற்காக திருவண்ணாமலைக்கு வர வேண்டாம் என சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.

மேலும், மாவட்ட நிர்வாகத்தின் நடவடிக்கைக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வேண்டும் என்றும் அவர் கேட்டுகொண்டார்.