பட்டாசுக்கு தடை – ‘கலங்கி’ நிற்கும் சிவகாசி

 

பட்டாசுக்கு தடை – ‘கலங்கி’ நிற்கும் சிவகாசி

கடந்த 80 ஆண்டுகளாக பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டு, ‘குட்டி ஜப்பான்’ என்றழைக்கப்பட்ட சிவகாசியில், பட்டாசுக்கு விதிக்கப்படும் தொடர் தடைகளால் சுமார் 7 லட்சம் தொழிலாளர்கள் வாழ்வாதாரத்திற்கு என்ன செய்வது என கண் கலங்கி நிற்கிறார்கள்.”இதுதான் எங்களுக்குத் தொழில்; இதை விட்டா எங்களுக்கு வேறெதுவும் தெரியாது. இதை வைத்துத்தான் பொழப்பு ஓடுது.குழந்தை, குட்டிகளை வச்சுகிட்டு நாங்க என்ன செய்ய..வேற எங்க போக…?” என்று புலம்புகின்றனர்,

பட்டாசுக்கு தடை – ‘கலங்கி’ நிற்கும் சிவகாசி


உலகில் சீனாவுக்கு அடுத்தபடியாக பட்டாசு தயாரிப்பில் இரண்டாம் இடத்தில் இருக்கிறது நமது தமிழகத்தை சேர்ந்த சிவகாசி நகரம்.இங்கு சுமார் 1,500 பட்டாசுத் தொழிற்சாலைகள் உள்ளன.சுமார் 7 லட்சம் பேர் நேரடியாக இந்தத் தொழிலில் ஈடுபட்டுள்ளனர்.பட்டாசுகளை வாங்கி விற்பது,வெளிடங்களுக்கு சரக்கு லாரியில் கொண்டு செல்வது என சுமார் 20 லட்சம் பேர் இந்தப் பட்டாசுத் தொழிலால் பயனடைந்து வருகின்றனர்.

பட்டாசுக்கு தடை – ‘கலங்கி’ நிற்கும் சிவகாசி


சிவகாசியில் 1928-ம் ஆண்டே பட்டாசுத் தொழிலுக்கு வித்திடப்பட்டாலும் 1940-ம் ஆண்டுக்குப் பிறகுதான் பட்டாசுத் தொழில் முக்கியத்துவம் பெறத் தொடங்கியது. இந்தியா முழுமைக்கும் இங்கிருந்தே பட்டாசுகள் விற்பனை செய்யப்படுகின்றன. நாட்டின் பட்டாசுத் தேவையில் 90 சதவீதத்தை பூர்த்தி செய்வது சிவகாசிதான்.இங்கு, 90 சதவிகித பட்டாசுகள் உற்பத்திசெய்யப்படுகின்றன.

பட்டாசுக்கு தடை – ‘கலங்கி’ நிற்கும் சிவகாசி


இந்தப் பகுதி மக்களில் பெரும்பாலான பேர் பட்டாசுத் தொழிலையே சார்ந்திருக்கின்றனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்புவரை பட்டாசு விற்பனையில் பல ஆயிரம் கோடி ரூபாய்க்கு வர்த்தகம் செய்துவந்த சிவகாசி நகரம், சமீபகாலமாக 50 சதவிகித பட்டாசுகளைக்கூட விற்பனை செய்யமுடியாமல் முடங்கிவருகிறது. இதற்குக் காரணம், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு ஒருபக்கம். பல மாநிலங்களில் பட்டாசுக்கு தடை போடுவது இன்னொரு பக்கம்.மேலும் நீதிமன்றத் தீர்ப்பின்படி தற்போது பட்டாசு வெடிக்கும் நேர அளவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பட்டாசுக்கு தடை – ‘கலங்கி’ நிற்கும் சிவகாசி


இதன் மூலம் காலம்,காலமாக மண்ணை நம்பி வாழ்ந்து வந்த சிவகாசிக் காரர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி இருக்கிறது. இன்னும் சில தினங்களில் தீபாவளி வர இருக்கிறது. இதற்காக, இந்த நிலையில், ” “தீபாவளிக்குப் பட்டாசு விற்றால் மட்டுமே எங்களுக்கு வாழ்வாதாரம். அதனால், பட்டாசு வெடிக்கும் நேரத்தை அதிகரிக்க வேண்டும்” எனப் பட்டாசு உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.