இலங்கையில் திலீபன் நினைவஞ்சலிக்கு தடை – மக்கள் அமைப்பு கண்டனம்

இலங்கையில் திலீபன் நினைவஞ்சலிக்கு தடை – மக்கள் அமைப்பு கண்டனம்

செப்டம்பர் 26 – இன்று திலீபன் உயிர்நீத்த தினம்.  இந்தியாவில் அண்டை நாடான இலங்கையில் தமிழர் உரிமைக்காக பல்வேறு குழுக்கள் போராடின. சில அகிம்சை ரீதியாகவும் சில ஆயுதக் குழுக்களாகவும். ஆயுதக்குழுக்களில் முதன்மையாக இருந்தது விடுதலைப் புலிகள்.

இலங்கையில் திலீபன் நினைவஞ்சலிக்கு தடை – மக்கள் அமைப்பு கண்டனம்

இலங்கையில் அமைதியை நிலைநாட்ட, இந்தியாவிலிருந்து அமைதிப் படை சென்றிருந்தது. விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்த திலீபன், இந்திய அமைதிப்படையை இலங்கையிலிருந்து வெளியேறச் சொல்லி உண்ணாவிரதம் இருந்தார். 12 நாட்கள் நீர் கூட அருந்தாமல் உண்ணாவிரதம் இருந்து இறந்துபோனார் திலீபன்.

அவரின் நினைவேந்தலுக்கு இலங்கை காவல் துறை அனுமதி அளிக்கவில்லை. சில நாட்களுக்கு முன் செஞ்சோலை நினைவஞ்சலிக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

இலங்கையில் திலீபன் நினைவஞ்சலிக்கு தடை – மக்கள் அமைப்பு கண்டனம்

திலீபன் நினைவஞ்சலி கூட்டத்திற்கு தடை விதிப்பு மக்கள் அமைப்பு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. ’தமிழர்களின் உரிமைகளுக்காகப் போராடி, உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த திலீபனின் நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு தடை விதித்திருப்பது வருத்தம் அளிக்கிறது. நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருப்பவர்களைக் கைது செய்திருப்பதற்கு கண்டனம்’ என்று தெரிவித்துள்ளார்.