தேர்தல் ரிசல்ட்…தமிழகத்திற்கு செக் வைத்த தேர்தல் ஆணையம்

 

தேர்தல் ரிசல்ட்…தமிழகத்திற்கு செக் வைத்த தேர்தல் ஆணையம்

5 மாநிலங்களில் தேர்தல் வெற்றி கொண்டாட்டங்களுக்கு தடை விதித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

தேர்தல் ரிசல்ட்…தமிழகத்திற்கு செக் வைத்த தேர்தல் ஆணையம்

கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி தமிழக சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்தது. 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடந்து முடிந்த நிலையில் 75 வாக்கு எண்ணும் மையங்களில் வாக்கு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன நிலையில் மே 2ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.இதனிடையே கரூர் தொகுதியில் உள்ள வாக்கு எண்ணிக்கை மையத்தில் கொரோனா தடுப்பு வழிமுறைகள் தீவிரப்படுத்த வேண்டும் என்ற அமைச்சர் விஜயபாஸ்கர் மனுவை விசாரித்த சென்னை உயர்நீதி மன்றம், “கொரனோ இரண்டாவது அலை தீவிரமடைய தேர்தல் ஆணையமே காரணம். கொரோனா 2ஆம் அலையால் ஏற்படும் உயிரிழப்பு கருத்தில் கொண்டு தேர்தல் ஆணையத்தின் மீது கொலைக் குற்றம் சுமத்தினாலும் தவறில்லை. வாக்கு எண்ணிக்கை நாளன்று அனைத்து கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுத்திருக்க வேண்டும். இல்லையென்றால் வாக்கு எண்ணிக்கைக்கு தடை விதிக்க நேரிடும் என்று எச்சரித்தது.

தேர்தல் ரிசல்ட்…தமிழகத்திற்கு செக் வைத்த தேர்தல் ஆணையம்

இந்நிலையில் வாக்கு எண்ணிக்கையின் போதும், தேர்தல் முடிவுக்கு பின்னரும் வெற்றி கொண்டாட்டங்களுக்கு தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. கொரோனா பரவலை கருத்தில் கொண்டு தமிழகம், புதுச்சேரி, மேற்கு வங்கம், கேரளா அசாம் உள்பட 5 மாநிலங்களுக்கு தேர்தல் ஆணையம் கட்டுப்பாடு விதித்துள்ளது. கொரோனா பரவ தேர்தல் ஆணையமே காரணம் என உயர் நீதிமன்றம் குற்றம் சாட்டிய நிலையில் இந்த கட்டுப்பாடு அறிவிப்பு விதிக்கப்பட்டுள்ளது. மே 2ல் வாக்கு எண்ணும்போது முன்னிலை, வெற்றியை அரசியல் கட்சியினர் கொண்டாடக் கூடாது என்று தேர்தல் ஆணையம் அறிவிப்பின் கடிதம் முக்கிய கட்சிகளுக்கு இன்று மாலைக்குள் அனுப்பி வைக்கப்படும் என்றும் தெரிகிறது.