பறவைக் காய்ச்சல் எதிரொலி: டெல்லிக்கு பறவைகளை கொண்டுவரத் தடை!

 

பறவைக் காய்ச்சல் எதிரொலி: டெல்லிக்கு பறவைகளை கொண்டுவரத் தடை!

கேரள மாநிலத்தில் பரவி வரும் பறவைக் காய்ச்சல் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆலப்புழா, கோட்டயம் உள்ளிட்ட மாநிலங்களில் பறவைக் காய்ச்சலால் நூற்றுக் கணக்கில் கோழிகளும், வாதிகளும் செத்து மடிந்தன. இந்த காய்ச்சல் மனிதர்களுக்கும் பரவ வாய்ப்பு இருப்பதாக அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியாகியுள்ளது. அதனால் கேரளாவில் இருந்து கோழி உள்ளிட்ட இறைச்சி பறவைகள் கொண்டு வர தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்கள் தடை விதித்துள்ளன.

பறவைக் காய்ச்சல் எதிரொலி: டெல்லிக்கு பறவைகளை கொண்டுவரத் தடை!

இதுவரை இந்தியாவின் 6 மாநிலங்களில் பறவைக் காய்ச்சல் பரவி இருப்பதாக மத்திய அரசு நேற்று அறிவித்தது. இதனிடையே, பறவைக் காய்ச்சல் அச்சத்தால் கோழி உள்ளிட்ட பறவை இறைச்சிகளின் விலை கடும் சரிவை சந்தித்துள்ளது. பறவை இறைச்சிகளை வாங்க மக்கள் அச்சம் காட்டுவதால், வியாபாரிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

பறவைக் காய்ச்சல் எதிரொலி: டெல்லிக்கு பறவைகளை கொண்டுவரத் தடை!

இந்த நிலையில், இறைச்சிக்கான பறவை இனங்களை டெல்லி கொண்டு வர தடை விதித்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. காய்ச்சல் பரவுவதை தடுக்கும் வகையில் 10 நாட்களுக்கு பறவைகளை கொண்டு வர தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், டெல்லியில் உள்ள முக்கியமான பறவை இறைச்சிக் கூடங்களை மூடவும் உத்தரவிடப்பட்டுள்ளது.