பைக் மற்றும் கார்களில் செல்ல தடை : தமிழக அரசு

 

பைக் மற்றும் கார்களில் செல்ல தடை : தமிழக அரசு

நீலகிரி மாவட்டம் கொடைக்கானல், ஏற்காடு ,ஏலகிரி, குற்றாலம் பகுதிகளுக்கு அவசர காரணங்களுக்காக பயணிக்க தொடர்புடைய மாவட்ட ஆட்சியர்களிடமிருந்து இபாஸ் பெற்று பயணிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கோயம்புத்தூர், திருப்பூர், சேலம், கரூர், ஈரோடு, நாமக்கல், திருச்சி மற்றும் மதுரை மாவட்டங்களில் உள்ள ஏற்றுமதி நிறுவனங்கள் ,ஏற்றுமதி நிறுவனங்களுக்கு இடுபொருள் தயாரித்து வழங்கும் நிறுவனங்கள், ஏற்றுமதி ஆணைகள் வைத்திருப்பின் ஏற்றுமதி தொடர்பான பணிகளுக்காகவும் மாதிரிகள் அனுப்புவதற்காக மட்டும் 10% பணியாளர்கள் நிலையான வழிகாட்டும் நடைமுறைகளை பின்பற்றி செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

பைக் மற்றும் கார்களில் செல்ல தடை : தமிழக அரசு

தமிழக அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நடமாடும் வாகனங்கள் மூலம் பொதுமக்களுக்கு காய்கறி , பழங்கள் ஆகியவை விற்பனை செய்யும் திட்டம் பொது மக்களின் வரவேற்பை பெற்றுள்ள நிலையில் இது தொடர்ந்து செயல்படுத்தப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது.

பொதுமக்கள் தங்களது வீடுகளுக்கு அருகில் உள்ள கடைகளுக்கு நடந்து சென்று பொருட்களை வாங்குமாறு இரண்டு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் கடைகளுக்கு செல்வது தவிர்க்குமாறும் தமிழக அரசை வலியுறுத்தி உள்ளது.

பைக் மற்றும் கார்களில் செல்ல தடை : தமிழக அரசு

கொரோனா நோய் தொற்றை கட்டுப்படுத்த பொதுமக்களின் நலன் கருதி தமிழ்நாட்டில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் அவசியமின்றி வீட்டிலிருந்து வெளியில் வருவதையும் கூட்டங்களையும் தவிர்க்க வேண்டும் . பொது இடங்களில் முக கவசம் அணிவது, சமூக இடைவெளியை கடைபிடிப்பது, கைகளை அடிக்கடி சோப்பு அல்லது கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்வது ஆகியவற்றை கட்டாயம் பின்பற்றவும் . நோய்த்தொற்று அறிகுறிகள் தென்பட்டவுடன் பொதுமக்கள் உடனே அருகில் உள்ள மருத்துவமனைகளை நாடி மருத்துவ ஆலோசனை மற்றும் சிகிச்சை பெற்றுக் கொள்ளவும் தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது.