‘BAN NEET’ வாசகத்துடன் கூடிய மாஸ்க் அணிந்து திமுக எம்எல்ஏக்கள் வருகை!

 

‘BAN NEET’ வாசகத்துடன் கூடிய மாஸ்க் அணிந்து திமுக எம்எல்ஏக்கள் வருகை!

நீட் தேர்வுக்கு எதிரான வாசகம் பொறிக்கப்பட்ட மாஸ்க் அணிந்து கொண்டு திமுக எம்எல்ஏக்கள் சட்டப்பேரவைக்கு வருகை தந்துள்ளனர்.

தமிழகத்தில் ஆண்டு இருமுறை நடக்கும் சட்டப்பேரவை கூட்டத்தொடரானது இன்று சென்னை சேப்பாக்கத்தில் இருக்கும் கலைவாணர் அரங்கில் தொடங்கியிருக்கிறது. வழக்கமாக கோட்டையில் நடைபெறும் கூட்டத்தொடர் கொரோனா அச்சம் மற்றும் இட நெருக்கடியின் காரணமாக முதன்முறையான கலைவாணர் அரங்கில் நடத்தப்படுகிறது.

‘BAN NEET’ வாசகத்துடன் கூடிய மாஸ்க் அணிந்து திமுக எம்எல்ஏக்கள் வருகை!

அவையின் தொடக்கத்தில் மறைந்த முன்னாள் குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி, காங்கிரஸ் எம்பி வசந்தகுமார், திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் உள்ளிட்டோருக்கு இரங்கல் தெரிவித்து, கூட்டத்தொடர் 1 மணி நேரத்துக்கு ஒத்திவைக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து சபாநாயகர் தனபால் தலைமையில் கூட்டத்தொடர் தற்போது மீண்டும் தொடங்கியுள்ளது.

இந்த நிலையில், ‘BAN NEET’ என்ற வாசகம் பொறிக்கப்பட்ட மாஸ்க்கை திமுக எம்எல்ஏக்கள் அனைவரும் சட்டப்பேரவைக்கு வருகை தந்துள்ளனர். மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வை ஆரம்பக்கட்டத்தில் இருந்தே எதிர்க்கும் திமுக பிரமுகர்கள், நீட் தேர்வால் நேற்று முன்தினம் ஒரே நாளில் 3 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டதால் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்து சட்டப்பேரவைக்கு வந்துள்ளனர். மேலும், நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி திமுக சட்டப்பேரவையில் மனு அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.