பக்ரீத் தொழுகை வழிகாட்டுதலை வெளியிட வேண்டும்! – தமிழக அரசுக்கு முஸ்லிம் லீக் கோரிக்கை

 

பக்ரீத் தொழுகை வழிகாட்டுதலை வெளியிட வேண்டும்! – தமிழக அரசுக்கு முஸ்லிம் லீக் கோரிக்கை

இஸ்லாமியர்களின் புனித பண்டிகையான பக்ரீத் வருகிற 1ம் தேதி கொண்டாடப்படும் என்று தமிழ்நாடு அரசின் தலைமை ஹாஜி அறிவித்துள்ள நிலையில், பண்டிகையைக் கொண்டாடுவது தொடர்பாக கொரோனா கால வழிகாட்டுதலை வெளியிட வேண்டும் என்று தமிழ்நாடு முஸ்லிம் லீக் வலியுறுத்தியுள்ளது.

பக்ரீத் தொழுகை வழிகாட்டுதலை வெளியிட வேண்டும்! – தமிழக அரசுக்கு முஸ்லிம் லீக் கோரிக்கை
பக்ரீத் பண்டிகை தமிழகத்தில் ஆகஸ்ட் 1ம் தேதி கொண்டாடப்படுகிறது. பக்ரீத் பண்டிகையையொட்டி குர்பானி எனப்படும் விலங்குகள் பலியிடப்பட்டு அதை மற்றவர்களுக்கு பகிர்ந்தளிக்கும் நிகழ்வு நடத்தப்படும். இந்த ஆண்டு கொரோனா பாதிப்பு காரணமாக ரம்ஜான் பண்டிகையின் போது சிறப்பு தொழுகை நடத்த அனுமதிக்கப்படவில்லை. இந்த நிலையில் குர்பானி கொடுப்பது, சிறப்பு தொழுகை நடத்துவது தொடர்பாக அரசு எந்த ஒரு அறிவிப்பையும் இது வரை வெளியிடவில்லை.
இந்த நிலையில் அரசு உரிய அறிவிப்பை வெளியிட வேண்டும் என்று தமிழ்நாடு முஸ்லிம் லீக் தலைவர் முஸ்தபா வலியுறுத்தியுள்ளார்.

பக்ரீத் தொழுகை வழிகாட்டுதலை வெளியிட வேண்டும்! – தமிழக அரசுக்கு முஸ்லிம் லீக் கோரிக்கை

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பக்ரீத் நாளில்தான், ‘இயன்றதை இல்லாதோர்க்கு கொடுத்து உதவுக’ என்ற கோட்பாடு தீவிரமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. குர்பானி கொடுப்பது ஓர் உன்னதமான வணக்க வழிபாடு என்று இஸ்லாத்தில் சொல்லப்பட்டுள்ளது.
இந்தாண்டின் ஆகஸ்ட் 1ம் தேதி பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படும் என்று தமிழக தலைமை காஜி சலாவுதீன் முகமது ஆயூப் அதிகாரபூர்வமாக கடந்த 22-ம் தேதியன்று அறிவித்துள்ளார். அதன்படி தமிழகத்தில் பக்ரீத் கொண்டாட்டத்திற்கு இன்னும் குறைந்த நாட்களே உள்ளநிலையில், பக்ரீத் பண்டிகையின் போது ஹஜ் பெருநாள் தொழுகையை திடல் மற்றும் பள்ளிவாசல்களில் இஸ்லாமியர்கள் நிறைவேற்றுவது வழக்கம், அந்த வகையில் இந்தாண்டு ஹஜ் பெருநாள் தொழுகை தொடர்பான எந்த அறிவிப்பு அரசிடம் இருந்து இதுநாள் வரை வரவில்லை.

பக்ரீத் தொழுகை வழிகாட்டுதலை வெளியிட வேண்டும்! – தமிழக அரசுக்கு முஸ்லிம் லீக் கோரிக்கை

கடந்த ரமலான் பண்டிகையின் போது, கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் வீடுகளிலேயே இஸ்லாமியர்கள் பெருநாள் தொழுகையை நிறைவேற்றினர்.
தற்போது தமிழகத்தில் கரோனா தொற்றால் பாதிப்பு என்பது இருந்தாலும், ஊரக பகுதிகளில் 10 ஆயிரம் ரூபாய் கீழ் வருவாய் உள்ள வழிபாட்டு தலங்கள் வழிபாட நடத்த தமிழக அரசு தற்போது அனுமதி அளித்துள்ள நிலையில், தமிழகம் முழுவதும் பக்ரீத் பண்டிகை இஸ்லாமியர்கள் எப்படி கொண்டாடுவது என்பது குறித்து இஸ்லாமிய அமைப்புகளுடன் தமிழக அரசு ஆலோசனை நடத்தி ஹஜ் திருநாள் வழிகாட்டு நெறிமுறைகளை விரைந்து வெளியிட்டு, இஸ்லாமிய மக்களின் குழப்பத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.