வட்டி வருவாய் அமோகம்.. ஆனால் லாபத்தில் சரிவை சந்தித்த பஜாஜ் பைனான்ஸ்

 

வட்டி வருவாய் அமோகம்.. ஆனால் லாபத்தில் சரிவை சந்தித்த பஜாஜ் பைனான்ஸ்

2020 செப்டம்பர் காலாண்டில் பஜாஜ் பைனான்ஸ் நிறுவனம் ஒட்டு மொத்த அளவில் லாபமாக ரூ.965 கோடி மட்டுமே ஈட்டியுள்ளது.

வங்கி அல்லாத நிதி சேவை நிறுவனமான பஜாஜ் பைனான்ஸ் நிறுவனம் தனது கடந்த செப்டம்பர் காலாண்டு நிதி முடிவுகளை வெளியிட்டுள்ளது. 2020 செப்டம்பர் காலாண்டில் பஜாஜ் பைனான்ஸ் நிறுவனம் ஒட்டு மொத்த அளவில் லாபமாக ரூ.965 கோடி மட்டுமே ஈட்டியுள்ளது. இது சென்ற ஆண்டின் இதே காலாண்டைக் காட்டிலும் சதவீதம் குறைவாகும். 2019 செப்டம்பர் காலாண்டில் இந்நிறுவனம் லாபமாக ரூ.1,506 கோடி ஈட்டியிருந்தது.

வட்டி வருவாய் அமோகம்.. ஆனால் லாபத்தில் சரிவை சந்தித்த பஜாஜ் பைனான்ஸ்
பஜாஜ் பைனான்ஸ்

பஜாஜ் பைனான்ஸ் நிறுவனம் ஒதுக்கீட்டை அதிகரித்ததே லாபம் குறைந்தற்கு முக்கிய காரணம். 2020 செப்டம்பர் காலாண்டில் பஜாஜ் பைனான்ஸ் நிறுவனத்தின் ஒட்டு மொத்த நிகர வட்டி வருவாய் 4 சதவீதம் அதிகரித்து ரூ.4,165 கோடியாக உயர்ந்துள்ளது.

வட்டி வருவாய் அமோகம்.. ஆனால் லாபத்தில் சரிவை சந்தித்த பஜாஜ் பைனான்ஸ்
பஜாஜ் பைனான்ஸ்

கடந்த செப்டம்பர் காலாண்டில் பஜாஸ் பைனான்ஸ் நிறுவனத்தின் மொத்த வாராக் கடன் 0.37 சதவீதம் குறைந்து 1.03 சதவீதமாக குறைந்துள்ளது. நிகர வாராக் கடன் 0.13 சதவீதம் வீழ்ச்சி கண்டு 0.37 சதவீதமாக குறைந்துள்ளது.