வட்டி வருவாய் சுமார்… பஜாஜ் பைனான்ஸ் லாபம் ரூ.1,145.98 கோடியாக வீழ்ச்சி

வட்டி வருவாய் சுமார்… பஜாஜ் பைனான்ஸ் லாபம் ரூ.1,145.98 கோடியாக வீழ்ச்சி

2020 டிசம்பர் காலாண்டில் பஜாஜ் பைனான்ஸ் நிறுவனம் ஒட்டு மொத்த அளவில் லாபமாக ரூ.1,145.98 கோடி மட்டுமே ஈட்டியுள்ளது.

வங்கி அல்லாத நிதி சேவை நிறுவனமான பஜாஜ் பைனான்ஸ் நிறுவனம் தனது கடந்த டிசம்பர் காலாண்டு நிதி முடிவுகளை வெளியிட்டுள்ளது. 2020 டிசம்பர் காலாண்டில் பஜாஜ் பைனான்ஸ் நிறுவனம் ஒட்டு மொத்த அளவில் லாபமாக ரூ.1,145.98 கோடி மட்டுமே ஈட்டியுள்ளது. இது முந்தைய ஆண்டின் இதே காலாண்டைக் காட்டிலும் 29 சதவீதம் குறைவாகும். 2019 டிசம்பர் காலாண்டில் இந்நிறுவனம் லாபமாக ரூ.1,614.11 கோடி ஈட்டியிருந்தது.

வட்டி வருவாய் சுமார்… பஜாஜ் பைனான்ஸ் லாபம் ரூ.1,145.98 கோடியாக வீழ்ச்சி
பஜாஜ் பைனான்ஸ்

2020 டிசம்பர் காலாண்டில் பஜாஜ் பைனான்ஸ் நிறுவனத்தின் ஒட்டு மொத்த நிகர வட்டி வருவாய் ரூ.4,296 கோடியாக குறைந்துள்ளது.
இது முந்தைய ஆண்டின் இதே காலாண்டைக் காட்டிலும் 5.3 சதவீதம் குறைவாகும். 2019 டிசம்பர் காலாண்டில் பஜாஜ் பைனான்ஸ் நிறுவனம் நிகர வட்டி வருவாயாக ரூ.4,535 கோடி ஈட்டியிருந்தது.

வட்டி வருவாய் சுமார்… பஜாஜ் பைனான்ஸ் லாபம் ரூ.1,145.98 கோடியாக வீழ்ச்சி
பஜாஜ் பைனான்ஸ்

2020 டிசம்பர் 31ம் தேதி நிலவரப்படி, பஜாஜ் பைனான்ஸ் நிறுவனத்தின் மொத்த வாராக்கடன் 0.55 சதவீதமாகவும், நிகர வாராக்கடன் 0.19 சதவீதமாகவும் குறைந்துள்ளது. மும்பை பங்குச் சந்தையில் நேற்று பஜாஜ் பைனான்ஸ் நிறுவன பங்கின் விலை 0.41 சதவீதம் அதிகரித்து ரூ.4,981.15ல் முடிவுற்றது.