வட்டி வருவாய் அமோகம்.. பஜாஜ் பைனான்ஸ் லாபம் ரூ.1,002 கோடி..

 

வட்டி வருவாய் அமோகம்.. பஜாஜ் பைனான்ஸ் லாபம் ரூ.1,002 கோடி..

பஜாஜ் பைனான்ஸ் நிறுவனம் 2021 ஜூன் காலாண்டில் ஒட்டு மொத்த அளவில் லாபமாக ரூ.1,002 கோடி ஈட்டியுள்ளது.
வங்கி அல்லாத நிதி சேவை நிறுவனமான பஜாஜ் பைனான்ஸ் நிறுவனம் தனது கடந்த ஜூன் காலாண்டு நிதி முடிவுகளை வெளியிட்டுள்ளது. பஜாஜ் பைனான்ஸ் நிறுவனம் 2021 ஜூன் காலாண்டில் ஒட்டு மொத்த அளவில் லாபமாக ரூ.1,002 கோடி ஈட்டியுள்ளது. இது சென்ற ஆண்டின் இதே காலாண்டைக் காட்டிலும் 4.2 சதவீதம் அதிகமாகும். 2020 ஜூன் காலாண்டில் இந்நிறுவனம் லாபமாக ரூ.962 கோடி ஈட்டியிருந்தது.

வட்டி வருவாய் அமோகம்.. பஜாஜ் பைனான்ஸ் லாபம் ரூ.1,002 கோடி..
பணம்

2021 ஜூன் காலாண்டில் பஜாஜ் பைனான்ஸ் நிறுவனத்தின் நிகர வட்டி வருவாய் ரூ.4,489 கோடியாக குறைந்துள்ளது. இது 2020 ஜூன் காலாண்டைக் காட்டிலும் 8 சதவீதம் அதிகமாகும். கடந்த ஜூன் காலாண்டு நிலவரப்படி, பஜாஜ் பைனான்ஸ் நிறுவனத்தின் மொத்த வாராக் கடன் 2.96 சதவீதமாகவும், நிகர வாராக் கடன் 1.46 சதவீதமாகவும் உள்ளது.

வட்டி வருவாய் அமோகம்.. பஜாஜ் பைனான்ஸ் லாபம் ரூ.1,002 கோடி..
பஜாஜ் பைனான்ஸ்

2021 ஜூன் காலாண்டில் பஜாஜ் பைனான்ஸ் நிறுவனம் 18.8 லட்சம் புதிய வாடிக்கையாளர்களை பெற்றுள்ளது. சென்ற ஆண்டின் இதே காலாண்டில் 5.3 லட்சம் புதிய வாடிக்கையாளர்களை பெற்று இருந்தது. மும்பை பங்குச் சந்தையில் நேற்று பங்கு வர்த்தகம் முடிவடைந்தபோது, பஜாஜ் பைனான்ஸ் நிறுவன பங்கின் விலை முந்தைய வர்த்தக தினத்தை காட்டிலும் 4.38 சதவீதம் உயர்ந்து ரூ.6,198.00ஆக இருந்தது.