லாக்டவுனால் விற்பனை படுத்தது.. ரூ.528 கோடி லாபத்துடன் திருப்தி அடைந்த பஜாஜ் ஆட்டோ

லாக்டவுனால் விற்பனை படுத்தது.. ரூ.528 கோடி லாபத்துடன் திருப்தி அடைந்த பஜாஜ் ஆட்டோ

இரு மற்றும் மூன்று சக்கர வாகனங்கள் தயாரிப்பில் ஈடுபட்டு வரும் பஜாஜ் ஆட்டோ நிறுவனம் கடந்த ஜூன் காலாண்டு நிதிநிலை முடிவுகளை வெளியிட்டுள்ளது. 2020 ஜூன் காலாண்டில் பஜாஜ் ஆட்டோ நிறுவனம் தனிப்பட்ட முறையில் லாபமாக ரூ.528.04 கோடி ஈட்டியுள்ளது. இது சென்ற ஆண்டின் இதே காலாண்டைக் காட்டிலும் 53.1 சதவீதம் குறைவாகும். 2019 ஜூன் காலாண்டில் பஜாஜ் ஆட்டோ நிறுவனம் தனிப்பட்ட லாபமாக ரூ.1,125.67 கோடி ஈட்டியிருந்தது.

லாக்டவுனால் விற்பனை படுத்தது.. ரூ.528 கோடி லாபத்துடன் திருப்தி அடைந்த பஜாஜ் ஆட்டோ

கொரோனா வைரஸால் அமல்படுத்தப்பட்ட லாக்டவுனால் இந்நிறுவனத்தின் வாகன விற்பனை குறைந்ததால் வருவாய் பாதித்தது. அதன் எதிரொலியாக பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் லாபம் குறைந்துள்ளது. 2020 ஜூன் காலாண்டில் பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் செயல்பாட்டு வருவாய் 60.3 சதவீதம் குறைந்து ரூ.3,079.24 கோடியாக சரிவடைந்துள்ளது.

லாக்டவுனால் விற்பனை படுத்தது.. ரூ.528 கோடி லாபத்துடன் திருப்தி அடைந்த பஜாஜ் ஆட்டோ

கடந்த ஜூன் காலாண்டில் பஜாஜ் ஆட்டோ நிறுவனம் மொத்தம் 4.43 லட்சம் வாகனங்களை மட்டுமே விற்பனை செய்துள்ளது. இது சென்ற ஆண்டின் இதே காலாண்டைக் காட்டிலும் 64.5 சதவீதம் குறைவாகும். 2019 ஜூன் காலாண்டில் பஜாஜ் ஆட்டோ நிறுவனம் மொத்தம் 12.47 லட்சம் வாகனங்களை விற்பனை செய்துள்ளது.