வைரஸை கட்டுப்படுத்துவதிலும், மக்களுக்கு நிவாரணம் வழங்குவதிலும் மத்திய அரசு தோல்வியுற்றது…. பகுஜன் சமாஜ் கட்சி குற்றச்சாட்டு..

 

வைரஸை கட்டுப்படுத்துவதிலும், மக்களுக்கு நிவாரணம் வழங்குவதிலும் மத்திய அரசு தோல்வியுற்றது…. பகுஜன் சமாஜ் கட்சி குற்றச்சாட்டு..

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க மத்திய அரசு கடுமையான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும், நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது. கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2.76 லட்சத்தை தாண்டி விட்டது. மேலும் தொற்று நோய்க்கு உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 8 ஆயிரத்தை நெருங்கி கொண்டு இருக்கிறது. இந்த சூழ்நிலையில், கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுபடுத்துவதிலும், லாக்டவுன் காலத்தில் மக்களுக்கு நிவாரணம் வழங்குவதிலும் மத்திய அரசு தோல்வி அடைந்தது என பகுஜன் சமாஜ் கட்சி குற்றச்சாட்டியுள்ளது.

வைரஸை கட்டுப்படுத்துவதிலும், மக்களுக்கு நிவாரணம் வழங்குவதிலும் மத்திய அரசு தோல்வியுற்றது…. பகுஜன் சமாஜ் கட்சி குற்றச்சாட்டு..

பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர் சுதின்ர பாடோரியா இது தொடர்பாக கூறியதாவது: கோவிட்-19 தொற்று நோய் பரவல் சமயத்தில் ஏழைகள் மற்றும் சிக்கி தவிக்கும் புலம்பெயர்ந்தோர் எதிர்கொண்ட பிரச்சினைகளை கையாளுவதில் மத்திய அரசு தோல்வியுற்றது என நான் சொல்கிறேன். மாநில அரசுகளும் இந்த விஷயத்தில் தோல்வி கண்டன. வைரஸ் பரவுவதை கட்டுபடுத்துவதிலும், மக்களுக்கு நிவாரணம் வழங்குவதிலும் மத்திய அரசு தோற்று விட்டது.

வைரஸை கட்டுப்படுத்துவதிலும், மக்களுக்கு நிவாரணம் வழங்குவதிலும் மத்திய அரசு தோல்வியுற்றது…. பகுஜன் சமாஜ் கட்சி குற்றச்சாட்டு..சொந்த ஊருக்கு திரும்பி செல்லுகையில் சிக்கி தவித்த புலம்பெயர்ந்தோர் தங்களது உயிர்களை இழந்த விதத்தை பார்த்தோம். பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதிக்கப்பட்டனர். கோவிட்-19 தொற்றுநோய் பரவலின்போது முழு தேசமும் பயங்கரமாக பாதிக்கப்பட்டது. இவ்வாறு அவர் தெரிவித்தார். தற்போது லாக்டவுன் விதிமுறைகள் தளர்த்தபட்டுள்ளதால் கொரோனா வைரஸ் பாதிப்பு மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.