ராஜஸ்தானில் பரபரப்பு.. காங்கிரசுக்கு எதிராக ஓட்டு போடுங்க.. தனது எம்.எல்.ஏ.க்களுக்கு மாயாவதி கட்சி உத்தரவு

ராஜஸ்தானில் பரபரப்பு.. காங்கிரசுக்கு எதிராக ஓட்டு போடுங்க.. தனது எம்.எல்.ஏ.க்களுக்கு மாயாவதி கட்சி உத்தரவு

ராஜஸ்தானில் கடந்த சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சி 6 இடங்களை வெற்றி பெற்றது. பகுஜன் ஜமாஜ் எம்.எல்.ஏ.க்கள் 6 பேரையும் காங்கிரஸ் பக்கம் இழுத்து விட்டார் முதல்வர் அசோக் கெலாட். தற்போது முன்னாள் துணை முதல்வர் சச்சின் பைலட்டும் அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேரும் அசோக் கெலாட்டுக்கு எதிராக போர்க்கொடி தூக்கி உள்ளதால் காங்கிரஸ் அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

ராஜஸ்தானில் பரபரப்பு.. காங்கிரசுக்கு எதிராக ஓட்டு போடுங்க.. தனது எம்.எல்.ஏ.க்களுக்கு மாயாவதி கட்சி உத்தரவு

இதனையடுத்து சட்டப்பேரவையில் தனது அரசுக்கு பெரும்பான்மை உள்ளதை நிருபிக்க அசோக் கெலாட் முயற்சி செய்து வருகிறார். இந்த சூழ்நிலையில் பகுஜன் சமாஜ் கட்சி தனது 6 எம்.எல்.ஏ.க்களும் தனித்தனியாகவும், கூட்டாகவும் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில் ராஜஸ்தான் சட்டப்பேரவையில் எந்தவொரு நம்பிக்கையில்லா தீர்மானம் அல்லது எந்தவொரு நடவடிக்கை நடந்தாலும் காங்கிரசுக்கு எதிராக ஓட்டளிக்கும்படி அதில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பகுஜன் சமாஜ் கட்சியின் இந்த அதிரடி நடவடிக்கை காங்கிரசுக்கு மேலும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தானில் பரபரப்பு.. காங்கிரசுக்கு எதிராக ஓட்டு போடுங்க.. தனது எம்.எல்.ஏ.க்களுக்கு மாயாவதி கட்சி உத்தரவு

பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் சதீஷ் சந்திரா மிஸ்ரா கூறுகையில், ஆறு எம்.எல்.ஏ.க்களுக்கு தனித்தனியாகவும், கூட்டாகவும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது, பகுஜன் சமாஜ் கட்சி ஒரு தேசிய கட்சி என்பதால், தேசிய அளவில் பகுஜன் சமாஜ் கட்சி இணைக்கப்படாவிட்டால் மாநில அளவில் எந்த இணைப்பும் இருக்க முடியாது. அரசியல் நெருக்கடி மற்றும் கோவிட்-19 சூழ்நிலையை கருத்தில் கொண்டு எந்தவித தாமதமும் இல்லாமல் ராஜஸ்தானில் குடியரசு தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என தெரிவித்தார்.