மோடி அரசு பொறுப்புகளிலிருந்து தப்ப முடியாது.. முதல்ல ஏழைகளுக்கு தடுப்பூசி போடுங்க.. பகுஜன் சமாஜ்

மோடி அரசு பொறுப்புகளிலிருந்து தப்ப முடியாது.. முதல்ல ஏழைகளுக்கு தடுப்பூசி போடுங்க.. பகுஜன் சமாஜ்

கோவிட்-19 தடுப்பூசியை முதலில் ஏழைகளுக்கு இலவசமாக போட வேண்டும் என்று மத்திய அரசை பகுஜன் சமாஜ்க கட்சி வலியுறுத்தியுள்ளது.

பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர் சுதிந்தர படோரியா கூறியதாவது: கோவிட்-19 நெருக்கடியால் கடந்த ஒரு வருடம் முழுவதும் மக்கள் பிரச்சினையில் இருந்தனர். எங்க கட்சி தலைவர் மாயாவதி ஜி, ஆதாரமற்ற ஏழை மக்களுக்கு முதல் கட்டத்தில் இலவசமாக தடுப்பூசி வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். அதனை வழங்கினால் (தடுப்பூசி போட்டால்) அவர்கள் தங்களது வாழ்க்கையை சுதந்திரமாக தொடர இது வழி செய்யும்.

மோடி அரசு பொறுப்புகளிலிருந்து தப்ப முடியாது.. முதல்ல ஏழைகளுக்கு தடுப்பூசி போடுங்க.. பகுஜன் சமாஜ்
சுதிந்தர படோரியா

குளிரான காலநிலைக்கு மத்தியில் கடந்த ஒன்றரை மாதங்களுக்கு மேலாக தலைநகரின் எல்லைகளில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 50க்கும் மேற்பட்டோர் கடும் குளிரில் இறந்துள்ளனர். இது அரசாங்கத்தின் பொறுப்பு, அதிலிருந்து அவர்களால் ஒட முடியாது. அவர்கள் வாக்குறுதி அளித்துள்ளனர், அவர்கள் அவற்றை நிறைவேற்ற வேண்டும்.

மோடி அரசு பொறுப்புகளிலிருந்து தப்ப முடியாது.. முதல்ல ஏழைகளுக்கு தடுப்பூசி போடுங்க.. பகுஜன் சமாஜ்
விவசாயிகள் போராட்டம் (கோப்புப்படம்)

விவசாயிகள் உலர் பழங்கள், கோழி பிரியாணியை அனுபவித்து வருவதாக ராஜஸ்தான் பா.ஜக.. தலைவர் கூறியது கண்டிக்கத்தக்கது. அது போன்று பேசுவது சரியல்ல. 60க்கும் மேற்பட்ட விவசாயிகள் இறந்து விட்டனர். இந்த சூழ்நிலையால் விவசாயிகள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகிறார்கள். இது போன்ற விஷயங்களை அவர்கள் சொல்லாமல் இருப்பது நல்லது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.