உத்தர பிரதேசத்தில் நாளுக்கு நாள் குற்ற விகிதம் அதிகரித்து வருகிறது… மாயாவதி

 

உத்தர பிரதேசத்தில் நாளுக்கு நாள் குற்ற விகிதம் அதிகரித்து வருகிறது… மாயாவதி

உத்தர பிரதேசத்தில் பால்லியா மாவட்டம் பெப்னா கிராமத்தில் பழைய நில பிரச்சினை காரணமாக பத்திரிகையாளர் ரத்தன் சிங் என்பவரை ஒரு கும்பல் துப்பாக்கியால் சுட்டு கொன்றது. இந்த கொலையில் சம்பந்தப்பட்ட முக்கிய குற்றவாளிகள் 3 பேரை கொலை நடந்த பகுதியிலேயே போலீசார் கைது செய்தனர். பத்திரிகையாளர் கொலை செய்யப்பட்ட சம்பவம் உத்தர பிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த சம்பவத்தை குறிப்பிட்டு எதிர்கட்சிகள் யோகி ஆதித்யநாத் அரசு மீது கடுமையான குற்றச்சாட்டுக்களை வீசி வருகின்றனர்.

உத்தர பிரதேசத்தில் நாளுக்கு நாள் குற்ற விகிதம் அதிகரித்து வருகிறது… மாயாவதி
மாயாவதி

பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி இது தொடர்பாக கூறுகையில், உத்தர பிரதேசத்தில் ஒவ்வொரு நாளும் குற்ற விகிதம் அதிகரித்து வருகிறது. இப்போது ஜனநாயகத்தின் நான்காவது தூண் மற்றும் நமது ஊடக பணியாளர்கள் குறிவைக்கப்படும் நிலைமை வந்து விட்டது. இது மாநிலத்தில் சட்டம் மற்றும் ஒழுங்கு நிலைமை பரிதாபகரமாக உள்ளது என்பதை வெளிப்படுத்துகிறது.

உத்தர பிரதேசத்தில் நாளுக்கு நாள் குற்ற விகிதம் அதிகரித்து வருகிறது… மாயாவதி
கொலை

நீட் மற்றும் ஜே.இ.இ. தேர்வுகளை எழுதப்போகும் லட்டசக்கணக்கான மாணவர்கள் தங்களை சிறந்த முயற்சியில் ஈடுபடுத்தி, தேர்வுகளுக்கு நன்கு தயார் செய்ய நான் சொல்ல விரும்புகிறேன். மேலும் கோவிட்-19 தொற்றுநோய் மத்தியில் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்து பரீட்சைகளை பாதுகாப்பாக நடத்துவதை உறுதி செய்யுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் நான் கேட்க விரும்புகிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.