பகுஜன் சமாஜ் எம்.எல்.ஏ-க்களை காங்கிரஸில் இணைத்த விவகாரம்! – நீதிமன்றத்தை நாடினார் மாயாவதி

 

பகுஜன் சமாஜ் எம்.எல்.ஏ-க்களை காங்கிரஸில் இணைத்த விவகாரம்! – நீதிமன்றத்தை நாடினார் மாயாவதி

பகுஜன் சமாஜ் கட்சியின் ஆறு எம்.எல்.ஏ-க்களை காங்கிரஸில் இணைத்ததற்கு எதிர்ப்ப தெரிவித்து அக்கட்சித் தலைவர் மாயாவதி நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளார். இது காங்கிரசுக்கு புதிய தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சியை கவிழ்த்துவிட்டு பாரதிய ஜனதா ஆட்சியை கொண்டுவர பல முயற்சிகள் நடந்து வருகின்றன. சச்சின் பைலட் அணிக்கு போதுமான எம்.எல்.ஏ-க்கள் கிடைக்காத நிலையில் காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ-க்களின் எண்ணிக்கையை குறைக்கும் வேலைகள் நடந்து வருகிறது.

பகுஜன் சமாஜ் எம்.எல்.ஏ-க்களை காங்கிரஸில் இணைத்த விவகாரம்! – நீதிமன்றத்தை நாடினார் மாயாவதி
2018ம் ஆண்டு நடந்த ராஜஸ்தான் சட்டமன்ற தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சியைச் சேர்ந்த ஆறு பேர் வெற்றி பெற்றனர். 2019ம் ஆண்டு அவர்கள் காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர். இதை எதிர்த்து தேர்தல் ஆணையத்தில் புகார் செய்தார் மாயாவதி.
தற்போது முதல்வர் அசோக் கெலாட்டுக்கும் சச்சின் பைலட் தரப்பு எம்.எல்.ஏ-க்களுக்கு இடையேயான தகுதி நீக்க விவகார வழக்கு ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. சட்டப் பேரவையைக் கூட்ட வேண்டும் என்று அசோக் கெலாட் வலியுறுத்தி வருகிறார்.

பகுஜன் சமாஜ் எம்.எல்.ஏ-க்களை காங்கிரஸில் இணைத்த விவகாரம்! – நீதிமன்றத்தை நாடினார் மாயாவதி
இந்த நிலையில் பகுஜன் சமாஜ் கட்சியின் கொறடா பகுஜன் சமாஜ் கட்சி எம்.எல்.ஏ-க்கள் அனைவரும் காங்கிரசில் இணைவது சாத்தியமில்லை. காங்கிரஸ் அரசு நம்பிக்கை கோரும் தீர்மானம் கொண்டு வந்தால் அதை எதிர்த்து வாக்களிக்க வேண்டும். மீறிச் செயல்பட்டால் தகுதி நீக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்று உத்தரவிட்டார்.

பகுஜன் சமாஜ் எம்.எல்.ஏ-க்களை காங்கிரஸில் இணைத்த விவகாரம்! – நீதிமன்றத்தை நாடினார் மாயாவதிமேலும் மாயாவதி தரப்பில் ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டுள்ளது. அதில், பகுஜன் சமாஜ் கட்சி ஒரு தேசிய கட்சி. அப்படி இருக்கும்போது ஒரு மாநிலத்தில் மட்டும் அந்த கட்சி வேறு ஒரு கட்சியோடு இணைய முடியாது. அதனால் பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்கள் பகுஜன் சமாஜ் கட்சி எம்.எல்.ஏ-க்களாகவே கருதப்படுவார்கள். எனவே, அவர்களை காங்கிரஸ் கட்சியில் இணைந்ததாக சபாநாயகர் அறிவித்தது தவறு. இதை ரத்து செய்ய வேண்டும்” என்று கோரப்பட்டுள்ளது.
பகுஜன் சமாஜ் கட்சியின் செயல்பாடு ராஜஸ்தான் காங்கிரஸ் ஆட்சிக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. சச்சின் பைலட்டுடன் இணைந்து மாயாவதியும் ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டுக்கு புதிய தலைவலியை ஏற்படுத்தியுள்ளார்.