பி.வி.சிந்து பயிற்சி எடுக்கும் அகாடமியில் ஒரு வீரருக்கு கொரோனா!

 

பி.வி.சிந்து பயிற்சி எடுக்கும் அகாடமியில் ஒரு வீரருக்கு கொரோனா!

கொரொனா தாக்குதல் இந்தியாவில் மிக அதிகளவில் உள்ளது. பெங்களூருவில் ஹாக்கி வீரர்களுக்கு செய்யப்பட்ட கொரோனா பரிசோதனையில் 5 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு சிகிச்சையில் உள்ளார்கள்.

இப்போது பேட்மின்டன் பிரிவிலும் ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவின் பிரபலமான பேட் மின்டன் வீரர். இவர் ஹைதராபாத் மாநகரில் உள்ள கோபிசந்த் பேட்மின்டன் அகாடமியில் பயிற்சி எடுத்தவர்.

பி.வி.சிந்து பயிற்சி எடுக்கும் அகாடமியில் ஒரு வீரருக்கு கொரோனா!
Badminton player sikki Reddy PC: facebook

தற்போது கொரோனா காலம் என்பதால் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும் என எல்லோருக்கும் அரசு அறிவுறுத்தி உள்ளது. அதனால் இந்த அகாடமியில் பயிற்சி பெறும் சிந்து, சாய் பிரனீத் உள்ளிட்ட வீரர்கள் தனித்தனியாக வந்து பயிற்சி எடுத்துச் செல்கிறார்கள்.

ஆயினும், இந்த அகாடமிக்கு வரும் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யுமாறு இந்திய தேசிய விளையாட்டு ஆணையம் உத்தரவிட்டது.

அதன்படி செய்யப்பட்ட பரிசோதனையில் சிக்கி ரெட்டி எனும் பேன்மின்டன் வீராங்கனைக்கு கொரோனா பாசிட்டிவ் என ரிசல்ட் வந்திருக்கிறது. மேலும், அவரது பிசியோதெரபி நிபுணருக்கும் பாசிட்டிவ் என ரிசல்ட் வந்திருக்கிறது. ஆயினும் இருவருக்கும் எந்த அறிகுறியும் இல்லை.

பி.வி.சிந்து பயிற்சி எடுக்கும் அகாடமியில் ஒரு வீரருக்கு கொரோனா!
Badminton player sikki Reddy PC: Twitter

இருவருக்கு பாசிட்டிவ் என்பதால் அகாடமி மூடப்பட்டு, முழுக்க கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது.

மற்ற வீரர்கள் பயிற்சி எடுக்கும் விதமாக இன்னும் ஓரிரு நாளில் அகாடமி வழக்கம்போல செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.