தருமபுரியில் 281 பயனாளிகளுக்கு ரூ.70 லட்சம் நலத்திட்ட உதவிகள் வழங்கிய ஆட்சியர்!

 

தருமபுரியில் 281 பயனாளிகளுக்கு ரூ.70 லட்சம் நலத்திட்ட உதவிகள் வழங்கிய ஆட்சியர்!

தருமபுரி

தருமபுரி மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் 281 பயனாளிகளுக்கு ரூ.70 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் திவ்யதர்ஷினி வழங்கினார்.

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் மாவட்ட முஸ்லீம் மகளிர் உதவும் சங்கத்தின் மூலம் தையல் இயந்திரம் 32 பயனாளிகளுக்கு ரூ.2.40 லட்சம் மதிப்பிலும், மளிகைக் கடை, காய்கறி கடை, துணி கடை மற்றும் இதர சிறு தொழில் தொடங்க 98 பயனாளிகளுக்கு ரூ.17.70 லட்சம் மதிப்பிலும், கல்வி உதவித்தொகை 1 பயனாளிக்கு ரூ.20ஆயிரம் மதிப்பிலும், மருத்துவ உதவித்தொகை 30 பயனாளிகளுக்கு ரூ.4.94 லட்சம் மதிப்பிலும் வழங்கப்பட்டது.

தருமபுரியில் 281 பயனாளிகளுக்கு ரூ.70 லட்சம் நலத்திட்ட உதவிகள் வழங்கிய ஆட்சியர்!

மேலும், கிறிஸ்தவ மகளிர் உதவும் சங்கத்தின் மூலம் மளிகை கடை, காய்கறி கடை, துணிக்கடை மற்றும் இதர சிறு தொழில் தொடங்க 42 பயனாளிகளுக்கு ரூ.7.07 லட்சம் மதிப்பிலும், கல்வி உதவித் தொகையாக 1 பயனாளிக்கு ரூ.10 ஆயிரம் மதிப்பிலும் நிதியுதவி வழங்கப்பட்டது. தொடர்ந்து, சிறு, குறு விவசாயிகளுக்கு மானியத்துடன் கூடிய நீர்பாசன கடன் வழங்கும் திட்டத்தின் கீழ் மாவட்டத்தில் 19 கூட்டுறவு சங்கங்களில் 77 சிறு, குறு விவசாயிகளுக்கு மானியத் தொகையாக ரூ.37 லட்சத்து 65 ஆயிரத்து 500 மதப்பிலும் நிவாரணம் வழங்கப்பட்டது.

மொத்தம் 281 பயனாளிகளுக்கு ரூ.70,05,500 மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கிடும் அடையளமாக 20 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் திவ்ய தர்ஷினி வழங்கினார். அரசின் நலத்திட்ட உதவிகளை பயனாளிகள் நன்முறையில் பயன்படுத்தி தங்களது வருவாயை பெருக்கி வாழ்க்கை தரத்தை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என மாவட்டஆட்சியர் திவ்யதர்ஷினி பயனாளிகளிடம் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியின்போது, கூட்டுறவு சங்க இணை பதிவாளர் ராமதாஸ், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நல அலுவலர் அய்யப்பன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.