துரைமுருகன் நீர்வளத்துறை அமைச்சரானதன் பின்னணி -சன்னியாசி சொல்லும் தகவல்

 

துரைமுருகன் நீர்வளத்துறை அமைச்சரானதன் பின்னணி -சன்னியாசி சொல்லும் தகவல்

நீர்வளத்துறை உருவானதற்கும் துரைமுருகன் அதற்கு அமைச்சரானதற்கும் உள்ள பின்னணியை சொல்கிறார் சன்னியாசி. தாங்கள் நிறைவேற்றிய தீர்மானத்தின்படி தான் முதல்வர் மு.க. ஸ்டாலின் நீர்வளத்துறை என்ற புதிய துறையை கொண்டு வந்ததாகவும், அந்த நீர் வளத் துறைக்கு தாங்கள் வைத்து கோரிக்கையின் அடிப்படையில் தான் துரைமுருகனை முதல்வர் அமைச்சர் ஆக்கினார் என்று தெரிவித்தார் அகில பாரத சன்னியாசிகள் சங்க அமைப்பாளர் ராமானந்த மகராஜ்.

துரைமுருகன் நீர்வளத்துறை அமைச்சரானதன் பின்னணி -சன்னியாசி சொல்லும் தகவல்

அகில பாரத சன்னியாசிகள் சங்கம் மற்றும் பாலாறு மக்கள் இயக்கம் சார்பில் வேலூரில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது . இந்த கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ராமானந்த மகராஜ் , தமிழகத்தில் இருக்கும் அனைத்து நிதிகளுக்கும் விழா எடுத்து அந்த நதிகளை பாதுகாக்க வேண்டும். தலைக்காவிரி முதல் பூம்புகார் வரை ஆண்டுதோறும் ரதயாத்திரை நடத்துகிறோம்.

நதிகளை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும் என்ற உணர்வை ஏற்படுத்த இந்த ரதயாத்திரை நடத்தப்படுகிறது. தாமிரபரணி புஷ்கரணி விழாவில் ஒரு கோடிக்கும் மேலானவர்கள் பங்கேற்றார்கள். 2019 ஆம் ஆண்டில் வைகை பெருவிழா நடத்திய பின்னர் பெரு வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. தென்பெண்ணை முதல் கடலூர் வரை தென்பெண்ணை ஆற்றில் பாதுகாக்கவும் பாதயாத்திரை நடத்த இருக்கின்றோம். அதை பாதுகாக்க ஆறு தொடங்கும் இடமான கர்நாடக மாநிலம் நந்தி துரோகம் மலையில் இருந்து தண்ணீர் எடுத்து கடலில் கலக்கும் செங்கல்பட்டு வரையிலும் அடுத்த ஆண்டு 2020 ஜனவரி 20 ஆம் தேதி அன்று முதல் 222 கிலோ மீட்டர் தூரம் நதியை பாதுகாக்க விழிப்புணர்வோடு பாலாறு விழா மற்றும் ரத யாத்திரை செய்து பூஜைகள் நடக்கும்.

துரைமுருகன் நீர்வளத்துறை அமைச்சரானதன் பின்னணி -சன்னியாசி சொல்லும் தகவல்

போகும் வழிகளில் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த துண்டு பிரசுரங்களும் கொடுத்து வழிபாடுகள் நடத்தப் போகிறோம் என்று அவர் தெரிவித்தார். மேலும் பாலாற்றை பாதுகாக்க திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூரில் கடந்த மார்ச் மாதம் 20ஆம் தேதி அகில பாரதிய சன்னியாசிகள் சங்கம் சார்பில் மாநாடு நடத்தப்பட்டது. அப்போது தமிழகத்தில் நீர்வளத்துறைக்கு என்று தனியாக ஒரு துறையை உருவாக்க வேண்டும். அந்தத் துறைக்கு ஒரு அமைச்சரை நியமிக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றினோம் . அதன்படியே முதல்வர் முகத்தில் நீர் வளத் துறைக்கு என்று ஒரு புதிய துறையை ஏற்படுத்தினார்.

புதிதாக ஏற்படுத்தப்பட்ட அந்த நீர்வளத்துறை துரைமுருகனை அமைச்சராக நியமிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தோம். அதன்படியே துரைமுருகனை நீர்வளத்துறை அமைச்சராக நியமித்து விட்டார். சாதுக்கள் நினைத்ததால் துரைமுருகன் நீர்வளத்துறை அமைச்சர் ஆகிவிட்டார். பாலாற்று விழாவில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடிக்கு அமைச்சர் துரைமுருகன் மூலமாகவே அழைப்பு விடுக்கப்படும் என்று தெரிவித்திருக்கிறார்.