• February
    27
    Thursday

Main Area

Main



லேடி சூப்பர் ஸ்டாரை தொடர்ந்து சூப்பர் ஸ்டார் படத்தில் இணைந்த மானஸ்வி 

நயன்தாரா- மானஸ்வி
நயன்தாரா- மானஸ்வி

சென்னை: பேபி மானஸ்வி தர்பார் படத்தில் ரஜினியுடன் நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. 

தமிழ் சினிமாவில் தற்போது ஒரு ஹீரோ, ஹீரோயின் பிரபலமடைவதை விட அந்த படத்தில் நடித்த குழந்தை நட்சத்திரம் தான் வேகமாக பிரபலமாகிறார்கள். அந்த வரிசையில் கடந்த ஆண்டு வெளியான இமைக்கா நொடிகள் படத்தில் லேடி சூப்பர் ஸ்டாரின் மகளாக நடித்து பிரபலமானவர் மானஸ்வி. போ போய் சிக்னல்ல பிச்சை எடு என்று அவர் பேசிய வசனம் இன்றும் பலரது மனதிற்கு நெருக்கமான ஒன்றாக உள்ளது. 

அந்த படத்தில் நடித்ததன் மூலம் இந்த குழந்தை யார் என்று நெட்டிசன்கள் தேட ஆரம்பித்தனர். அப்போது தான் தெரிந்தது இவர் காமெடி நடிகர் கொட்டாச்சியின் மகள் என்று. 

 மானஸ்வி

அந்த படத்தைத் தொடர்ந்து பல படங்களில் கமிட்டாகியுள்ள அவர் தற்போது ரஜினியின் தர்பார் படத்தில் சூப்பர் ஸ்டாருடன் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறாராம். இதுகுறித்து அவரின் தந்தை கூறுகையில், 'என்னுடைய மகள் இவ்வளவு பிரபலமாவது எனக்கு மிக மகிழ்ச்சி' என்று கூறியுள்ளார். 

2018 TopTamilNews. All rights reserved.