கோழி மருந்தை சாப்பிட்ட ஒன்றரை வயது குழந்தை, சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

 

கோழி மருந்தை சாப்பிட்ட ஒன்றரை வயது குழந்தை, சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

மதுரை

மதுரை அருகே கோழி மருந்தை குடித்த ஒன்றரை வயது பெண் குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டியை சேர்ந்தவர்கள் ரத்தினம் – செல்வி தம்பதியினர். இவர்களுக்கு ஒன்றரை வயதில் சுபாஷினி என்ற பெண் குழந்தை உள்ளது. இவர்கள் மதுரை மாவட்டம் கீழவளவு பகுதியில் உள்ள கோழிப் பண்ணையில் தங்கி, வேலை செய்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று செல்வி வழக்கம்போல் பண்ணையில் வேலையில் ஈடுபட்டிருந்துள்ளார். அப்போது அங்கு விளையாடி கொண்டிருந்த குழந்தை சுபாஷினி, எதிர்பாராத விதமாக அங்கு கோழிக்கு வைக்கப்பட்டிருந்த மருந்தை எடுத்து குடித்துள்ளார். இதனை அடுத்து, சிறிது நேரத்திலேயே குழந்தை மயங்கி விழுந்துள்ளது.

கோழி மருந்தை சாப்பிட்ட ஒன்றரை வயது குழந்தை, சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

இதனை கண்டு அருகில் இருந்தவர்கள் குழந்தையை உடனடியாக மீட்டு மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை பரிவில் அனுமதிக்கப்பட்ட குழந்தை சுபாஷினி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். தகல் அறிந்த கிழவளவு போலீசார் குழந்தையின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, குழந்தையின் பெற்றோர் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.