பாபர் மசூதி இடிப்பு வழக்கில் அனைவரும் விடுதலை – தவ்ஹீத் ஜமாத் ஆர்ப்பாட்டம்!

 

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் அனைவரும் விடுதலை –  தவ்ஹீத் ஜமாத் ஆர்ப்பாட்டம்!

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அனைவரும் விடுதலை செய்யப்பட்டதை கண்டித்து, திருச்சியில் தவ்ஹீத் ஜமாத் அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது.

பாபர் மசூதி இடிப்பு வழக்கு , லக்னோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. பா.ஜ.க மூத்த தலைவர் அத்வானி,உமாபாரதி,முரளி மனோகர் ஜோஷி உள்ளிட்டவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்ட நிலையில், அவைவரையும் நீதிமன்றம் விடுதலை செய்தது .

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் அனைவரும் விடுதலை –  தவ்ஹீத் ஜமாத் ஆர்ப்பாட்டம்!

இந்த தீர்ப்பை கண்டித்து, நாடு முழுதும் பல இஸ்லாமிய அமைப்பினர் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், திருச்சியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருச்சி பாலக்கரை பகுதியில், பெண்கள் உட்பட ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தீர்ப்பிற்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர். இந்த வழக்கில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.