ஒட்டு மொத்த நிலைமை மனதை உலுக்கும் வகையில் உள்ளது… ஆர்.எஸ்.எஸ். நிகழ்ச்சியில் பேசிய அசிம் பிரேம்ஜி

 

ஒட்டு மொத்த நிலைமை மனதை உலுக்கும் வகையில் உள்ளது… ஆர்.எஸ்.எஸ். நிகழ்ச்சியில் பேசிய அசிம் பிரேம்ஜி

கொரோனா வைரஸால் நாட்டின் ஒட்டு மொத்த நிலைமை மனதை உலுக்கும் வகையில் உள்ளது என்று ஆர்.எஸ்.எஸ். நிகழ்ச்சியில் அசிம் பிரேம்ஜி பேசினார்.

கொரோனா வைரஸ் தொற்றுநோயால் மக்கள் உடல் அளவிலும், மனதளவிலும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் குடிமக்களின் மனஉறுதியை உயர்த்துவதற்காக ஆர்.எஸ்.எஸ். பாசிட்டிவிட்டி அன்லிமிடெட் (நேர்மறை எண்ணங்கள் எல்லையற்றது) நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தது. இந்த நிகழ்ச்சியின் ஒரு பகுதி தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பட்டது.அந்த நிகழ்ச்சியல் விப்ரோ நிறுவனர் அசிம் பிரேம்ஜி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

ஒட்டு மொத்த நிலைமை மனதை உலுக்கும் வகையில் உள்ளது… ஆர்.எஸ்.எஸ். நிகழ்ச்சியில் பேசிய அசிம் பிரேம்ஜி
ஆர்.எஸ்.எஸ்.

அனைத்து முனைகளிலும் நாம் மிக வேகமாக செயல்பட வேண்டும், இந்த நடவடிக்கைகள் நல்ல அறிவியலை அடிப்படையாக கொண்டதாக இருக்க வேண்டும். இந்த நெருக்கடியை நாம் எதிர்கொள்ள வேண்டும். இதன் (வைரஸ்) அளவு மற்றும் பரவல் உண்மையானது. இந்த நெருக்கடியை சமாளிப்பதற்கும், அது மீண்டும் மீண்டும் நிகழாமல் இருப்பதை உறுதி செய்வதற்கும் விஞ்ஞானமு், உண்மையும் அடித்தளமாகும். தொற்றுநோயால் மட்டுமல்லாமல் பொருளாதார வீழ்ச்சியிலும் பேரழிவுக்கு ஆளாகும் மிகவும் பாதிக்கப்பட்டவர்கள் நிலை குறித்தும் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். ஒட்டு மொத்த நிலைமை மனதை உலுக்கும் வகையில் உள்ளது.

ஒட்டு மொத்த நிலைமை மனதை உலுக்கும் வகையில் உள்ளது… ஆர்.எஸ்.எஸ். நிகழ்ச்சியில் பேசிய அசிம் பிரேம்ஜி
கொரோனா வைரஸ்

ஆனால் நீங்கள் கிராமங்களையும், வறுமையில் இருப்பவர்களையும் பார்க்கிறீர்கள், இது தொற்றுநோய் மட்டுமல்ல, பொருளாதார விளைவுகளும் மக்களின் வாழ்க்கையை பேரழிவிற்கு உட்படுத்துகிறது. நம் நடவடிக்கைகள் அனைத்தும் பாதிக்கப்பட்டவர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் ஏனென்றால் அவர்கள் தகுதியானவர்கள். மேலும் நாம் இந்த நெருக்கடியிலிருந்து வெளியே வருகிறோம். நமது சமுதாயத்தையும், பொருளாதாரத்தையும் சீரமைக்க வேண்டும். ஒன்றாக நாம் வலுவாக இருக்கிறோம், பிளவுபட்டுள்ளோம் தொடர்ந்து போராடுகிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.