“இந்தியாவுக்கு இந்தி மட்டுமே சொந்தமா என்ற கேள்விகள் இதயத்தில் அறைவதை நிறுத்துங்கள்” : கவிஞர் வைரமுத்து காட்டம்!

“இந்தியாவுக்கு இந்தி மட்டுமே சொந்தமா என்ற கேள்விகள் இதயத்தில் அறைவதை நிறுத்துங்கள்” : கவிஞர் வைரமுத்து காட்டம்!

ஆன்லைன் மூலம் யோகா நேச்சுரோபதி மருத்துவர்களுக்கான யோகா பயிற்சி கடந்த 18-ஆம் தேதி முதல் 20-ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நாடு முழுவதும் உள்ள பலர் கலந்து கொண்டனர்.

“இந்தியாவுக்கு இந்தி மட்டுமே சொந்தமா என்ற கேள்விகள் இதயத்தில் அறைவதை நிறுத்துங்கள்” : கவிஞர் வைரமுத்து காட்டம்!

இதில் தமிழகத்தை சேர்ந்த 37 பேரும் அடங்கும். அப்போது ஆயுஷ் அமைச்சக செயலாளர் ராஜேஷ் கொடேஜா இந்தியில் பேசியுள்ளார். இதற்கு தமிழகத்தை சேர்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் , “தனக்கு ஆங்கிலத்தில் சரளமாக பேசத் தெரியாது. இந்தி தெரியாதவவர்கள் பயிற்சியில் இருந்து விலகிக் கொள்ளலாம் என்று ராஜேஷ் கொடேஜா கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில் இதுகுறித்து கவிஞர் வைரமுத்து, “இந்தி அறியாதார் யோகா பயிற்சியிலிருந்து வெளியேறலாம் என்று இந்திய அமைச்சகச் செயலாளர் அவமதித்திருப்பது அதிர்ச்சி தருகிறது. யோகா இந்திக்கு மட்டுமே சொந்தமா அல்லது இந்தியாவுக்கு இந்தி மட்டுமே சொந்தமா என்ற கேள்விகள் இதயத்தில் அறைவதை நிறுத்துங்கள்” என்று காட்டமாக பதிவிட்டுள்ளார்.