“இது இந்தி அரசல்ல;இந்திய அரசு என்பதை மறந்துவிட வேண்டாம்” : கமல் ஹாசன்

 

“இது இந்தி அரசல்ல;இந்திய அரசு என்பதை மறந்துவிட வேண்டாம்” : கமல் ஹாசன்

ஆன்லைன் மூலம் யோகா நேச்சுரோபதி மருத்துவர்களுக்கான யோகா பயிற்சியில் தமிழகத்தை சேர்ந்த 37 பேர் கலந்துகொண்டனர். அப்போது ஆயுஷ் அமைச்சக செயலாளர் ராஜேஷ் கொடேஜா இந்தியில் பேசியுள்ளார்.

“இது இந்தி அரசல்ல;இந்திய அரசு என்பதை மறந்துவிட வேண்டாம்” : கமல் ஹாசன்

இதற்கு தமிழகத்தை சேர்ந்த மருத்துவர்கள் இந்தி தெரியாது; ஆங்கிலத்தில் பேசுங்கள் என்று கூறியதற்கு , “தனக்கு ஆங்கிலத்தில் சரளமாக பேசத் தெரியாது. இந்தி தெரியாதவவர்கள் பயிற்சியில் இருந்து விலகிக் கொள்ளலாம் என்று ராஜேஷ் கொடேஜா கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு எம்பி கனிமொழி, ராமதாஸ், வைரமுத்து உள்ளிட்ட பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இதுகுறித்து மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல் ஹாசன் தனது டிவிட்டர் பக்கத்தில், “ஆயுஷ் அமைச்சக அதிகாரிகள் தமிழ் புரியாமல் எப்படி எங்கள் மருத்துவத்தைப் புரிந்து கொள்வர் என்ற கேள்வி எழுப்பாதது எம் மருத்துவர்களின் பெருந்தன்மை. அனைவருக்கும் புரியும் மொழியில் இயங்கவேண்டியது அரசின் கடமை.இது இந்தி அரசல்ல.இந்திய அரசு என்பதை மறந்துவிட வேண்டாம்.வாழிய பாரதமணித்திருநாடு” என்று பதிவிட்டுள்ளார்.