‘ஐம்பதுக்கும் மேற்பட்ட கொலை வழக்கு -நூறுக்கும் மேற்பட்ட கிட்னி திருட்டு’ -ஆயுள் தண்டனை பெற்ற ஆயுர்வேத டாக்டர் கைது..

 

‘ஐம்பதுக்கும் மேற்பட்ட கொலை வழக்கு -நூறுக்கும் மேற்பட்ட கிட்னி திருட்டு’  -ஆயுள் தண்டனை பெற்ற ஆயுர்வேத டாக்டர் கைது..

பல நூறு கொலைகளும் ,கொள்ளைகளும் செய்து விட்டு தலைமறைவாக இருந்த ஒரு ஆயுர்வேத மருத்துவரை போலீசார் கைது செய்தனர் .
உத்தரபிரதேசத்தின் அலிகிரா மாவட்டத்தில் உள்ள புரேனி கிராமத்தைச் சேர்ந்த BAMS பட்டம் பெற்ற 62 வயதான தேவேந்தர் சர்மாவுக்கு கொலை செய்வதும் .கிட்னி திருடுவதும் கை வந்த கலை .அவர் ராஜஸ்தான் .உ.பி .மற்றும் ஹரியானா மாநிலங்களில் செய்யாத சமூக விரோத செயல்கள் இல்லை என்று கூறலாம் .1994 முதல் 2004 வரை தான் கிட்டத்தட்ட நூறு கொலைகள் செய்திருக்கலாம் தன்னிடம் அதற்கெல்லாம் கணக்கே இல்லை என்று கூறுகிறார் .பிறகு அவர் ஆயுர்வேத டாக்டர் என்பதால் ஒரு க்ளினிக்கை திறந்து ,அங்கு கிட்னி சிகிச்சை செய்வது போல நூறுக்கும் மேற்பட்டோரின் கிட்னியை திருடி விற்று பல கோடிகள் சம்பாதித்துள்ளார்.பிறகு லாரி ஓட்டுனர்கள் மற்றும் டாக்ஸி ஓட்டுனர்களை கொன்று விட்டு அவர்களின் வாகனங்களை திருடி விற்று பல கோடிகள் சம்பாதித்துள்ளார் .பிறகு போலி எரிவாயு ஏஜென்சி வைத்து அதில் பல மோசடிகள் செய்தார் .

‘ஐம்பதுக்கும் மேற்பட்ட கொலை வழக்கு -நூறுக்கும் மேற்பட்ட கிட்னி திருட்டு’  -ஆயுள் தண்டனை பெற்ற ஆயுர்வேத டாக்டர் கைது..
இப்படியெல்லாம் வாழ்ந்த அவர் , 16 ஆண்டுகளுக்கு முன்பு போலீசில் சிக்கி ஆயுள் தண்டனை பெற்று 16 ஆண்டுகள் சிறையிலிருந்தார் .பிறகு சென்ற ஆண்டு அவர் பரோலில் வந்தபோது போலிஸிடமிருந்து தப்பி ஓடி விட்டார் .பிறகு தன்னுடைய கிராமத்தில் ஒரு விதவை பெண்ணை திருமணம் செய்து கொண்டார் .
இப்போது அவர் வசிக்குமிடம் போலீசுக்கு தெரிந்து விட்டதால் கடந்த செவ்வாய் கிழமையன்று போலீஸ் டீம் அவரின் வீட்டை சுற்றிவளைத்து கைது செய்தார்கள். ‘ஐம்பதுக்கும் மேற்பட்ட கொலை வழக்கு -நூறுக்கும் மேற்பட்ட கிட்னி திருட்டு’  -ஆயுள் தண்டனை பெற்ற ஆயுர்வேத டாக்டர் கைது..