ராமர் கோயில் டிசைனில் மாற்றம்… பூமி பூஜையில் கலந்து கொள்ள அத்வானி, முரளி மனோகர் ஜோஷிக்கு அழைப்பு

உத்தர பிரதேசம் மாநிலம் அயோத்தியில் மிகவும் பிரம்மாண்டமாக ராமர் கோயில் உருவாக உள்ளது. 1988ம் ஆண்டிலேயே ராமர் கோயில் 141 அடி உயரத்தில் 5 மண்டபங்களுடன் கட்ட டிசைன் செய்யப்பட்டது. இந்நிலையில் தற்போது அந்த டிசைனில் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. அதாவது கோயிலின் உயரத்தை 20 அடி அதிகரித்து 161 அடியாகவும், கூடுதலாக 2 மண்டபங்களும் டிசைனில் சேர்க்கப்பட்டுள்ளது.

ராமர்  கோயில் டிசைன்

இது தொடர்பாக ராமர் கோயிலின் தலைமை கட்டிடக் கலைஞர் சி. சோம்புரவின் மகனும், கட்டிடக் கலைஞருமான நிகில் சோம்புரா இது குறித்து கூறுகையில், முந்தைய டிசைன் 1988ல் உருவாக்கப்பட்டது, தற்போது 30 ஆண்டுகள் தாண்டிவிட்டதால் இந்த நேரத்தில் மக்கள் வருகை அதிகமாக இருக்கும். கோயில் வருவதற்கு மக்கள் ஆர்வமாக உள்ளதால் நாங்கள் அதன் அளவை அதிகரிக்க முடிவு செய்தோம். இதன் அடிப்படையில், கோயிலின் உயரத்தை 141 அடியிலிருந்து 161 அடியாக உயர்த்தப்படுகிறது. ஏற்கனவே தயாராக உள்ள பில்லர்கள் மற்றும் கற்கள் பயன்படுத்தப்படும், அவை வீண் ஆகாது. மேலும் கூடுதலாக 2 மண்டபங்கள் டிசைனில் சேர்க்கப்பட்டுள்ளது. 3.5 ஆண்டுகளில் கோயில் கட்டி முடிக்கப்படும் என தெரிவித்தார்.

கட்டிடக் கலைஞர் நிகில் சோம்புரா

ராமர் கோயிலுக்கு பூமி பூஜை வரும் ஆகஸ்ட் 5ம் தேதி நடைபெற உள்ளதாகவும், அதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்ள இருப்பதாகவும் தகவல். இந்த சூழ்நிலையில், பூமி பூஜையில் கலந்து கொள்ள வருமாறு, பா.ஜ.க.வின் மூத்த தலைவரும், முன்னாள் துணை பிரதமருமான எல்.கே. அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி, வினய் கட்டியார் ஆகியோருக்கு ஸ்ரீ ராம ஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை அழைப்பு விடுத்துள்ளது. இதுதவிர மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத், மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே மற்றும் பீகார் முதல்வர் நிதிஷ் குமார் ஆகியோருக்கும் ராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்க அழைப்புவிடுத்துள்ளதாக தகவல்.

Most Popular

சிறிய வழிபாட்டு தலங்களில் பொதுமக்கள் தரிசனத்திற்கு இன்று முதல் அனுமதி!

சென்னை உள்பட மாநகராட்சி பகுதிகளில் உள்ள சிறிய வழிபாட்டுத் தலங்கள் இன்று திறக்கப்படுகின்றன. தமிழகத்தில் கொரோனா பரவல் சற்று வீரியம் குறைந்து வருகிறது. இதனால் கொஞ்சம் கொஞ்சமாக தமிழகத்தில் ஊரடங்கு தளர்வு அறிவிக்கபட்டு வருகிறது. அதன்...

எஸ்எஸ்எல்சி பொதுத் தேர்வு முடிவு இன்று வெளியீடு!

எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு முடிவு இன்று வெளியாக இருக்கிறது. தேர்வு நடத்தப்படாத நிலையில் காலாண்டு, அரையாண்டு தேர்வை வைத்து மாணவர்களின் ரிசல்ட் வெளியிடப்படுகிறது. கொரோனா நோய்த்தொற்று காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் நடைபெறுவதாக இருந்த...

“பாலில் மருந்து பிறகு பலருக்கு விருந்து” பிரபல அனாதை இல்லத்தில் பெண்கள் பலாத்காரம் -பதினாலு வயது பெண் மூலம் வெளிவந்த திடுக்கிடும் தகவல்..

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் அருகே மேட்சல் மாவட்டத்தில் வேணுகோபால் என்பவரின் நன்கொடையில் மாருதி அனாதை இல்லம் இயங்கி வந்தது .இங்கு நூற்றுக்கணக்கான சிறுவர் சிறுமிகள் தங்கி இருக்கிறார்கள் .அந்த அனாதை இல்லத்தை விஜயா...

10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியாகிறது!

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணியளவில் வெளியாகிறது. தமிழகத்தில் கொரோனா  பாதிப்பால் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு மாணவர்கள் ஆல்பாஸ் என்று அறிவிக்கப்பட்டது.  இருப்பினும் அதற்கான தேர்வு...