அயோத்தி ராமர் கோவில் அடிக்கல் நாட்டு விழாவுக்கு தடை விதிக்க வேண்டும்! – நீதிமன்றத்தில் வழக்கு

 

அயோத்தி ராமர் கோவில் அடிக்கல் நாட்டு விழாவுக்கு தடை விதிக்க வேண்டும்! – நீதிமன்றத்தில் வழக்கு

ஆகஸ்ட் 5ம் தேதி அயோத்தியில் ராமர் கோவில் கட்ட அடிக்கல்நாட்டு விழா நடப்பது ஊரடங்கு விதிமுறைகளுக்கு எதிரானது என்பதால், இந்த விழாவுக்கு தடை விதிக்க வேண்டும் என்று அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
அயோத்தியில் வருகிற 5ம் தேதி ராமர் கோவில் கட்டுமானப் பணிகள்

அயோத்தி ராமர் கோவில் அடிக்கல் நாட்டு விழாவுக்கு தடை விதிக்க வேண்டும்! – நீதிமன்றத்தில் வழக்கு

தொடங்குகின்றன. இந்த விழாவில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளதாக ராமர்கோவில் கட்டுமான அறக்கட்டளை அறிவித்துள்ளது. மேலும் 200 பேர் மட்டுமே இந்த விழாவில் பங்கேற்க அனுமதிக்கப்படுவார்கள் என்றும் அது கூறியுள்ளது.
இந்த நிலையில் இந்த அடிக்கல் நாட்டுவிழாவுக்கு தடை விதிக்க வேண்டும் என்று அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் பொது நலன் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அந்த மனுவில், “தற்போது ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமானப் பணிக்கான அடிக்கல் நாட்டு விழா நடத்துவது கொரோனா பரவலை அதிகரிக்க செய்துவிடும்.

அயோத்தி ராமர் கோவில் அடிக்கல் நாட்டு விழாவுக்கு தடை விதிக்க வேண்டும்! – நீதிமன்றத்தில் வழக்குவிழாவில் பிரதமர் மோடி பங்கேற்கிறார் என்றால், மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்ட தலைவர்களும் பங்கேற்பார்கள். மக்கள் அதிக அளவில் கூடுவார்கள். இதனால் சமூக இடைவெளி உள்ளிட்ட கொரோனா தடுப்பு விதிமுறைகள் மீறப்படுவதற்கான வாய்ப்பு உள்ளது. எனவே. ராமர் கோவில் அடிக்கல் நாட்டு விழாவுக்கு தடை விதிக்க வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கு இன்னும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவில்லை. வழக்கை நீதிமன்றம் ஏற்றால் ராமர் கோவில் அடிக்கல் நாட்டு விழா மீண்டும் ஒரு முறை தள்ளிப்போகும் நிலை உருவாகும்.