அயோத்தி: அடிக்கல் நாட்டு விழா பூஜைகள் தொடங்கியது! – முதல் கட்டத்தில் ராமரைத் தவிர்த்து இதர தெய்வங்களுக்கு அழைப்பு

அயோத்தி: அடிக்கல் நாட்டு விழா பூஜைகள் தொடங்கியது! – முதல் கட்டத்தில் ராமரைத் தவிர்த்து இதர தெய்வங்களுக்கு அழைப்பு

அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமானப் பணிகள் ஐந்தாம் தேதி தொடங்கப்படுவதையொட்டி இன்று அதற்கான சிறப்பு பூஜைகள் தொடங்கின. இன்று நடைபெறும் முதல்கட்ட பூஜையில் ராமரைத் தவிர்த்து இதர தெய்வங்களுக்கு அழைப்பு விடுத்து பூஜை நடத்தப்படும் என்று புரோகிதர்கள் தெரிவித்துள்ளனர்.
நாளை (ஆகஸ்ட் 5) அயோத்தியில் ராமர் கோவில் அடிக்கல் நாட்டு விழா நடக்கிறது.

அயோத்தி: அடிக்கல் நாட்டு விழா பூஜைகள் தொடங்கியது! – முதல் கட்டத்தில் ராமரைத் தவிர்த்து இதர தெய்வங்களுக்கு அழைப்பு

இதையொட்டி மிக பிரம்மாண்ட ஏற்பாடுகளை உத்தரப்பிரதேச மாநில அரசு செய்து வருகிறது. அடிக்கல் நாட்டு விழா நாளை நடைபெறுவதையொட்டி இன்று அதற்கான ஆயத்த பூஜைகள் தொடங்கின.
இது குறித்து கோவில் புரோகிதர் சத்யநாராயண தாஸ் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு இது பற்றி பேட்டி அளித்துள்ளார். அப்போது அவர், “நான்கு கட்டமாக பூஜைகள் நடைபெறுகின்றன. இன்று நடைபெறும் முதல் கட்ட பூஜையில் ராமர் தவிர்த்து இதர தெய்வங்களை இந்த விழாவுக்கு அழைத்து பூஜை செய்யப்படுகிறது. அதைத் தொடர்ந்து அயோத்தியாவுக்கும் ராமரின் தளபதிகளான நல், சுக்ரீவன் உள்ளிட்டவர்களுக்கும் பூஜை செய்யப்படும்.

அயோத்தி: அடிக்கல் நாட்டு விழா பூஜைகள் தொடங்கியது! – முதல் கட்டத்தில் ராமரைத் தவிர்த்து இதர தெய்வங்களுக்கு அழைப்பு
மூன்றாம் கட்டமாக ராமரின் தந்தை, அவரது மனைவிகள், ராமரின் தம்பிகள், தம்பிகளின் மனைவிகள், ஆஞ்சநேயர் ஆகியோருக்கு சிறப்பு வழிபாடு, பூஜைகள் செய்யப்படும். நான்காவது கட்ட பூஜையில் ராமருக்கு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படும். அதன் பிறகே அடிக்கல் நாட்டு விழா நடைபெறும் என்று அவர் தெரிவித்துள்ளார்.