darbar
  • January
    25
    Saturday

Main Area

Main



அயோத்தி வழக்கு.. தீர்ப்பில் கருத்து முரண்பாடுகள்! முஸ்லீம் சட்டவாரிய அமைப்பு அறிவிப்பு!

அயோத்தி வழக்கு
அயோத்தி வழக்கு

அயோத்தி வழக்கில் இன்று தீர்ப்பு வெளியான நிலையில், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மதிக்கிறோம். ஆனால் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பில் எங்களுக்கு திருப்தியில்லை என்று சன்னி வக்பு வாரியம் தெரிவித்துள்ளது. உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனு தாக்கல் செய்ய இருப்பதாகவும் சன்னி வக்பு வாரியம் தெரிவித்து உள்ளது.

ayodhya

இந்நிலையில், உச்சநீதிமன்ற தீர்ப்பின் முழு விவரங்களும் கிடைத்த பின்னர் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்ய இருப்பதாக அனைத்து முஸ்லீம் சட்டவாரிய அமைப்பின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர். உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு நாங்கள் எதிர்பார்த்த வகையில் அமையவில்லை என்றும், தெரிவித்த அனைத்து முஸ்லீம் சட்டவாரிய அமைப்பு, தீர்ப்பு வெளியாகியுள்ள நிலையில், யாரும் எந்தவிதமான போராட்டங்களிலும் ஈடுபட வேண்டாம். அனைவரும் அமைதி காக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளது. 
உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கூறிய கருத்துக்கள் எதையும் நாங்கள் மறுக்கவில்லை என்றும் அதே சமயம், உச்சநீதிமன்ற தீர்ப்பில் எங்களுக்கு சில கருத்து முரண்பாடுகள் உள்ளன என்றும் அனைத்து முஸ்லீம் சட்டவாரிய அமைப்பு தெரிவித்துள்ளது.

2018 TopTamilNews. All rights reserved.