அயனாவரம் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் சிறையில் இருந்த குற்றவாளி தற்கொலை!

 

அயனாவரம் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் சிறையில் இருந்த குற்றவாளி தற்கொலை!

சென்னை அயனாவரத்தில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றில் வசித்து வந்த 11 வயது மாற்றுத்திறனாளி சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் அந்த குடியிருப்பில் வேலை பார்த்து வந்த காவலாளி, பிளம்பர், லிப்ட் ஆபரேட்டர்கள் உள்ளிட்ட 17 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் 17 பேரும் 6 மாதமாகச் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து வந்தது விசாரணையில் தெரிய வந்தது. தமிழகத்தையே உலுக்கிய இந்த சம்பவத்தின் வழக்கு விசாரணை போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கு நடந்து கொண்டிருக்கும் போதே குற்றவாளிகளுள் ஒருவரான பாபு காசநோயினால் காலமானார்.

அயனாவரம் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் சிறையில் இருந்த குற்றவாளி தற்கொலை!

இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, அந்த வீட்டின் தோட்டக்காரர் தவிர மீதி அனைவரும் குற்றவாளிகள் என்று தீர்ப்பளிக்கப்பட்டது. இதனையடுத்து சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததில் முக்கிய குற்றவாளியான ரவிக்குமார், சுரேஷ், குமரன் மற்றும் ராஜா ஆகிய 4 பேரையும் சாகும் வரை சிறையில் அடைக்க உத்தரவிடப்பட்டது. ஒருவருக்குச் சாதாரண ஆயுள் தண்டனையும், ஒருவருக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 9 பேருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் அளித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்நிலையில், இந்த வழக்கில் சிக்கி புழல் சிறையில் இருந்த பழனி என்னும் குற்றவாளி தற்கொலை செய்து கொண்டதாக தகவல்கள் வெளியாகின்றன.