கொட்டிய வட்டி வருவாய்… ஆக்சிஸ் வங்கி லாபம் ரூ.2,677 கோடி..

 

கொட்டிய வட்டி வருவாய்… ஆக்சிஸ் வங்கி லாபம் ரூ.2,677 கோடி..

ஆக்சிஸ் வங்கி 2021 மார்ச் காலாண்டில் லாபமாக ரூ.2,677 கோடி ஈட்டியுள்ளது.

பங்குகளின் சந்தை மதிப்பு அடிப்படையில் நாட்டின் 4வது பெரிய தனியார் வங்கியான ஆக்சிஸ் வங்கி தனது கடந்த மார்ச் காலாண்டு நிதி முடிவுகளை வெளியிட்டுள்ளது. ஆக்சிஸ் வங்கி 2021 மார்ச் காலாண்டில் லாபமாக ரூ.2,677 கோடி ஈட்டியுள்ளது. 2020 மார்ச் காலாண்டில் ஆக்சிஸ் வங்கி ரூ.1,387.8 கோடியை இழப்பாக சந்தித்து இருந்தது.

கொட்டிய வட்டி வருவாய்… ஆக்சிஸ் வங்கி லாபம் ரூ.2,677 கோடி..
ஆக்சிஸ் வங்கி

2021 மார்ச் காலாண்டில் ஆக்சிஸ் வங்கியின் நிகர வட்டி வருவாய் (வட்டி வருவாய்க்கும், செலவுக்கும் இடையிலான வித்தியாசம்) ரூ.7,555 கோடியாக உயர்ந்துள்ளது. இது சென்ற ஆண்டின் இதே காலாண்டைக் காட்டிலும் 11 சதவீதம் அதிகமாகும். 2020 மார்ச் காலாண்டில் ஆக்சிஸ் வங்கி நிகர வட்டி வருவாயாக ரூ.6,807.7 கோடி ஈட்டியிருந்தது.

கொட்டிய வட்டி வருவாய்… ஆக்சிஸ் வங்கி லாபம் ரூ.2,677 கோடி..
ஆக்சிஸ் வங்கி

2021 மார்ச் இறுதி நிலவரப்படி ஆக்சிஸ் வங்கியின் மொத்த வாராக் கடன் 3.44 சதவீத்திலிருந்து 3.70 சதவீதமாகவும், நிகர வாராக்கடன் 0.75 சதவீதத்திலிருந்து 1.05 சதவீதமாகவும் உயர்ந்துள்ளது. மும்பை பங்குச் சந்தையில் கடந்த வெள்ளிக்கிழமையன்று பங்கு வர்த்தகம் முடிவடைந்தபோது ஆக்சிஸ் பங்கு விலை முந்தைய வர்த்தக தினத்தை காட்டிலும் 0.70 சதவீதம் சரிந்து ரூ.714.50ஆக குறைந்தது.