வட்டி வருவாய் அதிகரித்தும் லாபத்தில் வீழ்ச்சி…. ஆக்சிஸ் வங்கி

 

வட்டி வருவாய் அதிகரித்தும் லாபத்தில் வீழ்ச்சி…. ஆக்சிஸ் வங்கி

ஆக்சிஸ் வங்கி 2020 டிசம்பர் காலாண்டில் தனிப்பட்ட முறையில் லாபமாக ரூ.1,116.6 கோடி ஈட்டியுள்ளது.

பங்குகளின் சந்தை மதிப்பு அடிப்படையில் நாட்டின் 4வது பெரிய தனியார் வங்கியான ஆக்சிஸ் வங்கி தனது கடந்த டிசம்பர் காலாண்டு நிதி முடிவுகளை வெளியிட்டுள்ளது. ஆக்சிஸ் வங்கி 2020 டிசம்பர் காலாண்டில் தனிப்பட்ட முறையில் லாபமாக ரூ.1,116.6 கோடி ஈட்டியுள்ளது. இது முந்தைய ஆண்டின் இதே காலாண்டைக் காட்டிலும் 36.4 சதவீதம் குறைவாகும். 2019 டிசம்பர் காலாண்டில் ஆக்சிஸ் வங்கி தனிப்பட்ட முறையில் லாபமாக ரூ.1,757 கோடி ஈட்டியிருந்தது.

வட்டி வருவாய் அதிகரித்தும் லாபத்தில் வீழ்ச்சி…. ஆக்சிஸ் வங்கி
ஆக்சிஸ் வங்கி

2020 டிசம்பர் காலாண்டில் ஆக்சிஸ் வங்கியின் நிகர வட்டி வருவாய் 14.3 சதவீதம் அதிகரித்து ரூ.7,372.76 கோடியாக உயர்ந்துள்ளது. 2019 டிசம்பர் காலாண்டில் ஆக்சிஸ் வங்கியின் நிகர வட்டி வருவாய் ரூ.6,452.98 கோடியாக இருந்தது. மேலும் அந்த காலாண்டில் ஆக்சிஸ் வங்கி வழங்கிய கடன் 6 சதவீதம் உயர்ந்துள்ளது. ஆக்சிஸ் வங்கி திரட்டிய டெபாசிட் 11 சதவீதம் ஏற்றம் கண்டு ரூ.6.54 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.

வட்டி வருவாய் அதிகரித்தும் லாபத்தில் வீழ்ச்சி…. ஆக்சிஸ் வங்கி
ஆக்சிஸ் வங்கி

கடந்த டிசம்பர் இறுதி நிலவரப்படி, ஆக்சிஸ் வங்கியின் மொத்த வாராக்கடன் 3.44 சதவீதமாகவும், நிகர வாராக்கடன் 0.74 சதவீதமாகவும் குறைந்துள்ளது. கடந்த அக்டோபர்-டிசம்பர் மாத காலத்தில், ஆக்சிஸ் வங்கி பங்கு விலை 46 சதவீதம் உயர்ந்துள்ளது. இருப்பினும் ஒட்டு மொத்த அளவில் 2020 காலண்டர் ஆண்டில் ஆக்சிஸ் வங்கி பங்கு விலை 18 சதவீதம் குறைந்துள்ளது.