வாராக் கடன் குறைப்பு…. ரூ.1,112 கோடி லாபம் ஈட்டிய ஆக்சிஸ் வங்கி …

வாராக் கடன் குறைப்பு…. ரூ.1,112 கோடி லாபம் ஈட்டிய ஆக்சிஸ் வங்கி …

நாட்டின் முன்னணி தனியார் வங்கிகளில் ஒன்றான ஆக்சிஸ் வங்கி கடந்த ஜூன் காலாண்டு நிதிநிலை முடிவுகளை வெளியிட்டுள்ளது. 2020 ஜூன் காலாண்டில் ஆக்சிஸ் வங்கி தனிப்பட்ட முறையில் நிகர லாபமாக ரூ.1,112 கோடி ஈட்டியுள்ளது. இது சென்ற ஆண்டின் இதே காலாண்டைக் காட்டிலும் 19 சதவீதம் குறைவாகும். 2019 ஜூன் காலாண்டில் ஆக்சிஸ் வங்கி நிகர லாபமாக ரூ.1,370 கோடி ஈட்டியிருந்தது.

வாராக் கடன் குறைப்பு…. ரூ.1,112 கோடி லாபம் ஈட்டிய ஆக்சிஸ் வங்கி …

2020 ஜூன் காலாண்டில் ஆக்சிஸ் வங்கியின் மொத்த வருவாய் ரூ.19,125.57 கோடியாக உள்ளது. மேலும் அந்த காலாண்டில் ஆக்சிஸ் வங்கி வாராக் கடன் மற்றும் எதிர்பாராத செலவுகளுக்காக ரூ.4,416.42 கோடி ஒதுக்கியுள்ளது. இது சென்ற ஆண்டின் இதே காலாண்டைக் காட்டிலும மிகவும் அதிகமாகும். 2019 ஜூன் காலாண்டில் ஆக்சிஸ் வங்கி ரு.3,814.58 கோடி ஒதுக்கீடு செய்து இருந்தது.

வாராக் கடன் குறைப்பு…. ரூ.1,112 கோடி லாபம் ஈட்டிய ஆக்சிஸ் வங்கி …

ஆக்சிஸ் வங்கியின் நிகர லாபம் குறைந்ததற்கு ஒதுக்கீடு தொகை அதிகரித்ததுதான் காரணம். கடந்த ஜூன் 30ம் தேதி நிலவரப்படி, ஆக்சிஸ் வங்கியின் மொத்த வாராக் கடன் 4.72 சதவீதமாகவும், நிகர வாராக் கடன் 1.23 சதவீதமாகும் குறைந்துள்ளது. 2019 ஜூன் 30ம் தேதி அந்த வங்கியின் மொத்த வாராக் கடன் 5.25 சதவீதமாகவும், நிகர வாராக் கடன் 2.04 சதவீதமாகவும் இருந்தது.