Home வணிகம் கை கொடுத்த வட்டி வருவாய்... ரூ.1,683 கோடி லாபம் ஈட்டிய ஆக்சிஸ் வங்கி...

கை கொடுத்த வட்டி வருவாய்… ரூ.1,683 கோடி லாபம் ஈட்டிய ஆக்சிஸ் வங்கி…

ஆக்சிஸ் வங்கி 2020 செப்டம்பர் காலாண்டில் நிகர லாபமாக ரூ.1,683 கோடி ஈட்டியுள்ளது.

நாட்டின் முன்னணி தனியார் வங்கிகளில் ஒன்றான ஆக்சிஸ் வங்கி தனது செப்டம்பர் காலாண்டு நிதி முடிவுகளை வெளியிட்டுள்ளது. ஆக்சிஸ் வங்கி 2020 செப்டம்பர் காலாண்டில் நிகர லாபமாக ரூ.1,683 கோடி ஈட்டியுள்ளது. 2019 செப்டம்பர் காலாண்டில் ஆக்சிஸ் வங்கி ரூ.112 கோடியை நிகர இழப்பாக சந்தித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

ஆக்சிஸ் வங்கி

2020 செப்டம்பர் காலாண்டில் ஆக்சிஸ் வங்கியின் நிகர வட்டி வருவாய் ரூ.7,326 கோடியாக உயர்ந்துள்ளது. இது சென்ற ஆண்டின் இதே காலாண்டைக் காட்டிலும் 20 சதவீதம் அதிகமாகும். 2019 செப்டம்பர் காலாண்டில் ஆக்சிஸ் வங்கி நிகர வட்டி வருவாயாக ரூ.6,102 கோடியை ஈட்டியிருந்தது. இதே காலாண்டுகளில் ஆக்சிஸ் வங்கியின் நிகர வட்டி லாபவரம்பு 3.51 சதவீதத்திலிருந்து 3.58 சதவீதமாக உயர்ந்துள்ளது.

ஆக்சிஸ் வங்கி

கடந்த செப்டம்பர் காலாண்டில் ஆக்சிஸ் வங்கியின் வாராக்கடன் நிலவரத்தில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. கடந்த செப்டம்பர் காலாண்டு இறுதி நிலவரப்படி, ஆக்சிஸ் வங்கியின் மொத்த வாராக் கடன் 4.72 சதவீததிலிருந்து 4.18 சதவீதமாகவும், நிகர வாராக்கடன் 1.23 சதவீதத்திலிருந்து 0.98 சதவீதமாகவும் குறைந்துள்ளது.

மாவட்ட செய்திகள்

Most Popular

கடல்வீரர்கள் 3ம் ஆண்டு நினைவு தினம்; 172 பேருக்கும் அஞ்சலி

29.11.2017 இரவில் வீசிய அந்த ஒக்கி புயலின் தாக்கத்தில் இருந்து இன்னமும் மீளவில்லை கன்னியாகுமரி. 172 உயிர்களை காவு வாங்கிய அந்த சோகத்தில் இருந்து இன்னமும் தவித்துக்கொண்டிருக்கிறார்கள் உறவினர்கள்.

அடிப்படை வசதிகள் செய்து தரக் கோரி ஆட்சியரை முற்றுகையிட்ட பொதுமக்கள்

தேனி தேனி மாவட்டம் தேவதானப்பட்டியில் அடிப்படை வசதிகள் செய்துதரக் கோரி, மாவட்ட ஆட்சியரை பொதுமக்கள் முற்றுகையிட்டு மனு வழங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. தேனி மாவட்டம் தேவதானப்பட்டி...

சட்டமன்ற தேர்தல் பணிகள் குறித்து அமமுக நிர்வாகிகள் ஆலோசனை

திருப்பத்தூர் திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கட்சியின் சார்பில் 2021ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் பணிகளுக்கான ஆய்வு கூட்டம் நடைபெற்றது. ஆம்பூர்...

விஜய் மக்கள் இயக்கத்தின் யூ-டியூப் சேனல் : அதிகாரப்பூர்வ தகவல்!

விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் விரைவில் யூட்யூப் சேனல் ஒன்று தொடங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் விஜய் மக்கள்...
Do NOT follow this link or you will be banned from the site!