கீறல் விழுந்த ரிக்கார்டுகளுக்கு நெத்தியடி! ஓப்பனிங்கிலும், பினிஷிங்கிலும் அசத்தும் எடப்பாடி!

கீறல் விழுந்த ரிக்கார்டுகளுக்கு நெத்தியடி! ஓப்பனிங்கிலும், பினிஷிங்கிலும் அசத்தும் எடப்பாடி!

ஒட்டுமொத்த எதிர்க் கட்சிகளும், ஒருசில மீடியாக்களும் ’கீறல் விழுந்த ரிக்கார்டு’ போல அந்தக் கேள்வியை திரும்பத் திரும்ப எழுப்பிக் கொண்டிருக்கின்றன.
தமிழக சட்டசபைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் மாற்றம் வருமா? அப்படி மாற்றம் வந்தால் யார் தலைமையில் கூட்டணி? என்பதுதான் அந்தக் கேள்வி.

தமிழக அரசியல் நிலவரம் புரிந்தவர்களுக்கும், அதிமுகவின் உண்மையான பலத்தைத் தெரிந்தவர்களுக்கும் இந்தக் கேள்வி அர்த்தமற்றதாகவே இருக்கும் என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.

கீறல் விழுந்த ரிக்கார்டுகளுக்கு நெத்தியடி! ஓப்பனிங்கிலும், பினிஷிங்கிலும் அசத்தும் எடப்பாடி!

சுமார் ஒரு கோடிக்கும் அதிகமான எண்ணிக்கையில் உறுப்பினர்களைக் கொண்ட மாபெரும் மக்கள் இயக்கமான அதிமுக, கடந்த அரை நூற்றாண்டு காலமாக அள்ளிக்குவித்த வெற்றிகளை பட்டியலிட்டால் பக்கங்கள் போதாது.

திண்டுக்கல் இடைத்தேர்தல் வெற்றி முதல் சமீபத்திய நான்குனேரி, விக்கிரவாண்டி இடைத் தேர்தல் வெற்றி வரையிலும் எடுத்துக்கொண்டால், இந்திய அளவில் வேறு எந்தக் கட்சியும் இப்படி உச்சங்களைத் தொட்டதில்லை. எம்ஜிஆர், ஜெயலலிதா காலங்களில் எந்தளவிற்கு எழுச்சியுடன் இருந்ததோ அதற்கு சற்றும் குறையாதத் துடிப்புடன் அதிமுக இன்றைக்கும் வீறுநடை போட்டுக்கொண்டிருப்பது எதார்த்தமான உண்மை.

கீறல் விழுந்த ரிக்கார்டுகளுக்கு நெத்தியடி! ஓப்பனிங்கிலும், பினிஷிங்கிலும் அசத்தும் எடப்பாடி!

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக அரசின் ஆற்றல் மிகுந்த நிர்வாகமும், மக்கள்நலத் திட்டங்களை செயல்படுத்துவதில் காட்டும் அக்கறையும், விவசாயம், தொழில், வர்த்தகம் போன்றவற்றை மேம்படுத்துவதில் வெளிப்படுத்தும் ஈடுபாடும், கோடிக்கணக்கில் முதலீடுகளை ஈர்த்து வேலைவாய்ப்புகளை பெருக்குவதில் செலுத்தும் மதிநுட்பமும் எல்லோராலும் உற்று கவனிக்கப்பட்டு வருகிறது. இது தவிர கொரோனா பேரிடரை தமிழக அரசு எதிர்கொண்டு வரும் விதம் அனைத்துத் தரப்புகளிலும் இருந்தும் பாராட்டுதல்களை பெற்று வருகிறது.

கீறல் விழுந்த ரிக்கார்டுகளுக்கு நெத்தியடி! ஓப்பனிங்கிலும், பினிஷிங்கிலும் அசத்தும் எடப்பாடி!

இதன் எதிரொலியாக தமிழக முதல்வரின் செல்வாக்கு விர்..,விர் என உச்சத்திற்கு எகிறியுள்ளது. ’அரியர்ஸ்’ தேர்வு ரத்து நடவடிக்கை இளைய சமூகத்தின் ஏகோபித்த
அபிமானத்தையும் அவருக்குப் பெற்றுத் தந்திருக்கிறது. இத்தகைய சூழலில் கூட்டணி தலைமை குறித்த பேச்சுக்களில் உள்நோக்கம் நிறையவே உண்டு என்கிறார்கள் விபரமறிந்தவர்கள்.

கீறல் விழுந்த ரிக்கார்டுகளுக்கு நெத்தியடி! ஓப்பனிங்கிலும், பினிஷிங்கிலும் அசத்தும் எடப்பாடி!

இது குறித்து நம்மிடம் பேசிய மூத்த பத்திரிகையாளர் ஒருவர், ’’முதல்வர் எடப்பாடியைப் பொறுத்தவரை ஓப்பனிங்கிலும் சரி, பினிஷிங்கிலும் சரி அசத்தலாகவே செயல்படுகிறார். ஒரு சோதனையான காலத்தில் ஆட்சியை அவர் நல்லபடியாகக் கொண்டு செல்லும் விதத்தை மக்கள் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். அதோடு எடப்பாடி அரசின் மக்கள்நலத் திட்டங்கள் ஒவ்வொரு குடும்பத்தையும் ஏதோ ஒரு வகையில் சென்றடைந்திருக்கின்றன. இதனால் அதிமுகவின் வலிவும், பொலிவும் முன்பைவிட அதிகரித்திருக்கிறது என்றே சொல்ல வேண்டும்.

கீறல் விழுந்த ரிக்கார்டுகளுக்கு நெத்தியடி! ஓப்பனிங்கிலும், பினிஷிங்கிலும் அசத்தும் எடப்பாடி!

நிலைமை இவ்வாறு இருக்க, அதிமுக கூட்டணியில் மாற்றம், கூட்டணி தலைமையில் மாற்றம் என்றெல்லாம் பேசுவது அர்த்தமற்றது.

சமீபத்திய தஞ்சை பயணத்தின்போது, ‘அதிமுக தலைமையில்தான் கூட்டணி’ என முதல்வர் பழனிச்சாமி நெத்தியடியாக சொன்ன பிறகும் சிலர் இது
பற்றி கூக்குரல் எழுப்புவது வேடிக்கையாகவே இருக்கிறது. கூட்டணி தொடர்பாக அதிமுகவோடு யாரும் முரண்பட்டால் இழப்பு அவர்களுக்குத்தான் இருக்குமே தவிர, அதிமுகவிற்கு நிச்சயம் இருக்காது’’ என்றார் திட்டவட்டமாக.