• February
    27
    Thursday

Main Area

Main



புத்தாண்டு கொண்டாட்ட விபத்து பற்றி விழிப்புணர்வு... ரஜினி, கமலுக்கு இயக்குநர் சுசீந்திரன் வேண்டுகோள்

அஜித்
அஜித்


ஒவ்வொரு ஆண்டும் புத்தாண்டு கொண்டாட்ட மிகுதியில் வாகன விபத்துக்கள் ஏற்பட்டு உயிரிழப்பு நடப்பது தொடர்கதையாக உள்ளது. இது பற்றிய விழிப்புணர்வை ரஜினி, கமல், அஜித், விஜய் உள்ளிட்ட நடிகர்கள் மேற்கொள்ள வேண்டும் என்று இயக்குநர் சுசீந்திரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

susee

இது தொடர்பாக சுசீந்திரன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அவர் எழுதிய புத்தாண்டு தொடர்பான கோரிக்கை கடிதத்தைக் காட்டியுள்ளார். அதில், "அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துகள். புத்தாண்டை மிகுந்த பாதுகாப்புடன் கொண்டாடுங்கள். ஏனென்றால், புத்தாண்டு விபத்தில் 10,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கிறார்கள். எத்தனையோ பேருடைய வீட்டில் புத்தாண்டு சோகமான நாளாக அமைந்துள்ளது. விபத்துகளைத் தவிர்ப்போம்.

susee

சினிமா பிரபலங்கள், அரசியல் பிரபலங்கள் அனைவருக்கும் ஒரு வேண்டுகோள் வைக்கிறேன். இந்தப் புத்தாண்டுக் கொண்டாட்டத்தில் நடக்கும் விபத்தில் யாருமே மரணமடையக் கூடாது. இதுவரை நடந்த புத்தாண்டுக் கொண்டாட்டத்தில் பல்லாயிரக் கணக்கானோர் உயிர் இழந்துள்ளனர்.

kamal

ரஜினி சார், கமல், சார், அஜித் சார், விஜய் சார்.. உங்களை இவ்வளவு உயரத்தில் தூக்கிப் பிடித்திருக்கும் உங்களது ரசிகர்களுக்கு விழிப்புணர்வை உண்டாக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

2018 TopTamilNews. All rights reserved.