’74 பேருக்கு விருதுகள் அறிவிப்பு’.. டெல்லி விஞ்ஞான் பவனில் இன்று நடைபெறுகிறது விருது வழங்கும் விழா!

’74 பேருக்கு விருதுகள் அறிவிப்பு’.. டெல்லி விஞ்ஞான் பவனில் இன்று நடைபெறுகிறது விருது வழங்கும் விழா!

விளையாட்டுத் துறையில் மிக உயரிய விருதாக கருதப்படும் கேல் ரத்னா விருது விளையாட்டு துறையில் சிறந்து விளங்கும் பல்வேறு துறை சார்ந்த வீரர்களுக்கு ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்னர், கேல் ரத்னா விருதுகள் மற்றும் அர்ஜுனா விருதுகள் யாருக்கு வழங்கப்பட உள்ளது என்ற அறிவிப்பு வெளியாகியது. அப்போது, பாரா ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற வீரர் மாரியப்பனுக்கும், டேபிள் டென்னிஸ் வீராங்கனை மணிகா பத்ராவுக்கும் , மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகட்க்கும் இந்திய கிரிக்கெட் அணி வீரர் ரோஹித் ஷர்மாவுக்கும், ஹாக்கி வீராங்கனை ராணிக்கும் கேல் ரத்னா விருது அறிவிக்கப்பட்டது.

’74 பேருக்கு விருதுகள் அறிவிப்பு’.. டெல்லி விஞ்ஞான் பவனில் இன்று நடைபெறுகிறது விருது வழங்கும் விழா!

அதே போல, இந்திய கிரிக்கெட் வீரர் இஷாந்த் ஷர்மா, வீராங்கனை தீப்தி ஷர்மா,தடகள வீராங்கனை டூட்டி சந்த், துப்பாக்கிச் சுடுதல் மனு பாக்கருக்கு அர்ஜுனா விருதுகள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. கொரோனா பாதிப்பின் காரணமாக காணொளி வாயிலாக விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

’74 பேருக்கு விருதுகள் அறிவிப்பு’.. டெல்லி விஞ்ஞான் பவனில் இன்று நடைபெறுகிறது விருது வழங்கும் விழா!

இந்த நிலையில் கேல் ரத்னா மற்றும் அர்ஜுனா விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி இன்று காணொளி வாயிலாக டெல்லி விஞ்ஞான் பவனில் நடைபெற உள்ளது. அந்த விழாவில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், விளையாட்டு துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ, ஒலிம்பிக் சங்க தலைவர் நரேந்திர துருவ் பாத்ரா உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். 7 பிரிவுகளில் 74 பேருக்கு விருது அறிவிக்கப்பட்டதால், 80 பேர் காணொளி வாயிலாக பங்கேற்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.