“இந்த இடங்களில் ஆவி பிடித்தால் நுரையீரல் பாதிப்பு ஏற்படும்” : அமைச்சர் மா.சுப்ரமணியன்

 

“இந்த இடங்களில் ஆவி பிடித்தால் நுரையீரல் பாதிப்பு ஏற்படும்”  : அமைச்சர் மா.சுப்ரமணியன்

பொது இடங்களில் ஆவி பிடிப்பதை தவிர்க்க வேண்டும் என மருத்துவத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் அறிவுறுத்தியுள்ளார்.

“இந்த இடங்களில் ஆவி பிடித்தால் நுரையீரல் பாதிப்பு ஏற்படும்”  : அமைச்சர் மா.சுப்ரமணியன்

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து எடுக்கப்பட்டு வருகின்றது. அந்த வகையில் கொரோனாவிலிருந்து தப்பிக்க ஆவி பிடித்தல் வழிமுறை பயனுள்ளதாக உள்ளதாக தகவல்கள் வெளியாகின. இதனால் கொரோனா தீவிர ஒழிப்பு நாட்களாக இந்த வாரம் முழுவதும் நீராவி வாரம் என கடைபிடிக்கப்பட்டு ஆவி பிடிக்க வேண்டும் என்ற செய்திகளும் வேகமாக பரவியது .எலுமிச்சை ,நொச்சி இலை, வெற்றிலை, கற்பூரவல்லி, துளசி ,இஞ்சி, ஓமம்,கல் உப்பு, மஞ்சள்தூள் ,மிளகு, பூண்டு ஆகியவற்றை தண்ணீரில் கொதிக்க வைத்து ஆவி பிடிக்க வேண்டும் என்று சொல்லப்பட்டது.
இதனால் பல்வேறு ஊர்களில் ஆவி பிடிக்கும் மையங்களும் தொடங்கி செயல்பட்டு வருகிறது. சமீபத்தில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பொதுவெளியில் 10 ஆவி பிடிக்கும் இயந்திரம் அமைக்கப்பட்டு பொதுமக்கள் தொடர்ந்து பயன்படுத்தி வந்தனர்.

“இந்த இடங்களில் ஆவி பிடித்தால் நுரையீரல் பாதிப்பு ஏற்படும்”  : அமைச்சர் மா.சுப்ரமணியன்

இந்நிலையில் சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன், “பொது இடங்களில் ஆவி பிடிப்பதை தவிர்க்க வேண்டும் . பொது இடங்களில் ஆவி பிடித்தால் நுரையீரல் பாதிப்பு ஏற்படும். சென்னை திருச்சி ஈரோடு கோவை உள்ளிட்ட ஊர்களில் பொது இடங்களில் மக்கள் ஆவி பிடித்துள்ளனர். பொது இடங்களில் ஆவி பிடிப்பதால் மற்றவர்களுக்கு தொற்று பரவ வாய்ப்புள்ளது. ஆவி பிடிக்கும் போது அழுத்தமான காற்று சென்று நுரையீரலை பாதிப்படைய செய்யும். அத்துடன் வாயிலுள்ள தொற்றுக்கிருமிகள் மற்றவர்களுக்கும் பரவ வாய்ப்புள்ளது.இதை ஊக்குவிக்க கூடாது” என்றார்.