லாபத்தை கோட்டை விட்ட ராதா கிஷன் தமானி நிறுவனம்.. அவென்யூ சூப்பர்மார்ட்ஸ் லாபம் ரூ.40 கோடியாக சரிவு

லாபத்தை கோட்டை விட்ட ராதா கிஷன் தமானி நிறுவனம்.. அவென்யூ சூப்பர்மார்ட்ஸ் லாபம் ரூ.40 கோடியாக சரிவு

இந்திய தொழில்துறையில் மகிவும் பிரபலமான நபர் ராதா கிஷன் தமானி. இவர்தான் அவென்யூ சூப்பர்மார்ட்ஸ் நிறுவனத்தை நடத்தி வருகிறார். நிறுவனம் டி மார்ட் என்ற பெயரில் சூப்பர் மார்க்கெட்டை நடத்தி வருகிறது. தமிழகத்தின் முக்கிய நகரங்களில் மட்டுமே இந்த சூப்பர் மார்க்கெட் உள்ளது. பொதுவாக டி-மார்ட் சூப்பர் மார்க்கெட்டுகளில் வியாபாரம் நன்றாக இருக்கும். ஆனால் கொரோனா வைரசுக்கு இந்த நிறுவனமும் தப்பவில்லை என தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அதாவது வர்த்தகம் பாதிப்பை சந்தித்துள்ளது.

லாபத்தை கோட்டை விட்ட ராதா கிஷன் தமானி நிறுவனம்.. அவென்யூ சூப்பர்மார்ட்ஸ் லாபம் ரூ.40 கோடியாக சரிவு
டி-மார்ட்

அவென்யூ சூப்பர்மார்ட் 2020 ஜூன் காலாண்டில் லாபமாக ரூ.40.09 கோடி ஈட்டியுள்ளது. இது சென்ற ஆண்டின் இதே காலாண்டைக் காட்டிலும் 87.6 சதவீதம் குறைந்துள்ளது. 2019 ஜூன் காலாண்டில் அந்நிறுவனம் லாபமாக ரூ.323.09 கோடி ஈட்டியிருந்தது. வருவாய் குறைந்தது அந்நிறுவனத்தின் லாபம் குறைந்ததற்கு முக்கிய காரணம்.

லாபத்தை கோட்டை விட்ட ராதா கிஷன் தமானி நிறுவனம்.. அவென்யூ சூப்பர்மார்ட்ஸ் லாபம் ரூ.40 கோடியாக சரிவு

2020 ஜூன் காலாண்டில் அவென்யூ சூப்பர்மார்ட்ஸ் நிறுவனத்தின் செயல்பாட்டு வாயிலான மொத்த வருவாய் 33.2 சதவீதம் குறைந்து ரூ.3,883.2 கோடியாக சரிவடைந்துள்ளது. நிதிநிலை முடிவுகள் குறித்து அந்நிறுவனம் கூறுகையில், கோவிட்-19 தொடர்ந்து நாடு முழுவதும் பரவியது. அதன் தொடர்ச்சியாக கொண்டுவரப்பட்ட அடுத்தடுத்த கட்டுப்பாட்டுகள் கடந்த காலாண்டில் எங்கள் செயல்பாடு மற்றும் நிதி செயல்திறனில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன என தெரிவித்துள்ளது.