‘ஜல்லிக்கட்டுக்கு தயாராகும் அவனியாபுரம்’ : பணிகள் தீவிரம்!

 

‘ஜல்லிக்கட்டுக்கு தயாராகும் அவனியாபுரம்’ : பணிகள் தீவிரம்!

அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு நடத்த வாடிவாசல் மற்றும் பேரிகார்டுகள் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையையொட்டி ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்படுவது வழக்கம். கொரோனா அச்சுறுத்தலால் இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு நடத்தப்படுமா? என்று கேள்விகள் எழுந்த நிலையில், உரிய கொரோனா தடுப்பு நடவடிக்கையுடன் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி அளித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. ஜல்லிக்கட்டின் போது பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளையும் தமிழக அரசு வெளியிட்டிருந்தது.

‘ஜல்லிக்கட்டுக்கு தயாராகும் அவனியாபுரம்’ : பணிகள் தீவிரம்!

அரசின் உத்தரவின் படி அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் உள்ளிட்ட முக்கிய இடங்களில் ஜல்லிக்கட்டுக்கான பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. தைத்திருநாள் முதல் நாளன்றே அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு நடைபெறும் என்பதால், மாவட்ட நிர்வாகம் சார்பில் ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. திருப்பரங்குன்றம் சாலையில் வாடிவாசல் அமைக்க தென்னை தூண்கள் நடப்பட்டுள்ளன.

‘ஜல்லிக்கட்டுக்கு தயாராகும் அவனியாபுரம்’ : பணிகள் தீவிரம்!

பார்வையாளர்களுக்காக பேரிகார்டுகள் அமைக்கப்பட்டு, சவுக்கு கம்புகளும் நடப்பட்டு வருகிறது. இதனிடையே, ஜல்லிக்கட்டில் களமிறங்கவிருக்கும் வீரர்களுக்கு அரசின் உத்தரவின் படி நாளை முதல் கொரோனா பரிசோதனை நடத்தப்பட உள்ளது. கொரோனா பரிசோதனை செய்யாதவர்கள, போட்டியில் பங்கேற்க அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் மாவட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.