Home ஆன்மிகம் ஆன்ம பலத்தை அளிக்கும் ஆவணி மாத தேய்பிறை ஏகாதசி விரதம்!

ஆன்ம பலத்தை அளிக்கும் ஆவணி மாத தேய்பிறை ஏகாதசி விரதம்!

ஆன்ம பலத்தை அதிகரிக்கச் செய்யும் ஆவணி மாத தேய்பிறை ஏகாதசி “காமிகா” என்றழைக்கப்படுகிறது. இன்று விரதம் இருந்து தனி துளசியால் மஹா விஷ்ணுவை அர்ச்சித்து வழிபாடு செய்தால் வீட்டில் மஹாலட்சுமி தாயார் நிரந்தரமாக வாசம் செய்வாள். நமது விருப்பங்கள் நிறைவேற்றும். மன பயம், மரண பயம், கொடிய துன்பம் ஆகியவற்றை நீங்கும்.

இன்று ஏகாதசி! ஏகாதசி விரத மகிமை என்ன? | Lifestyle News in Tamil

திங்கள்/ சனிப் பிரதோஷங்கள் எவ்வளவு சிறப்பு வாய்ந்ததோ அதேபோன்று பூசம், புனர்பூசம், திருவோணம், ரோகிணி நட்சத்திரங்களில் வரும் ஏகாதசிகள் அதி சிறப்பு கொண்டது. சூரியபகவானுக்கு உகந்த நாளான இன்று புனர்பூசம் நட்சத்திரமும் கூடிய நாளாக இந்த நாளில் ஏகாதசி வந்துள்ளது.

ஏகாதசி விரதங்களும் அதன் பலன்களும் || ekadasi viratham benefits

ஆவணி மாதமானது தமிழ் சூரிய மாதத்தில் சிங்க மாதம் என்றும் அழைக்கப்படுகிறது. இதனால் ஆவணியானது மாதங்களின் அரசன் என்ற சிறப்பினைப் பெறுகிறது. கேரளாவில் ஆவணி மாதமே ஆண்டின் முதல் மாதமாகக் கருதப்படுகிறது.
ஏகாதசி விரதம் இருந்து விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம் செய்வது மிகவும் விஷேசமாகும். விஷ்ணு சகஸ்ரநாம ஸ்தோத்திர பாராயணம் செய்வதால் விஷ்னுவை அதிதேவதையாக கொண்ட புத கிரக தோஷங்களும் சனி கிரக தோஷங்களும் நீங்கி பல உயர்வான நற்பலன்கள் ஏற்படும்.

ஏகாதசி விரதங்களும் அதன் பலன்களும் || ekadasi viratham benefits

ஏகாதசி அன்று இரவும், பகலும் விரதம் இருந்து மஹாவிஷ்ணுவை துதிப்போருக்கு நீடித்த புகழ்,நோயற்ற வாழ்வு, நன்மக்கட்பேறு முதலியவற்றை பகவான் அளிப்பதோடு, மறுமையில் வைகுண்டவாசம் சொர்க்கவாசல் வழங்குவதாகவும் புராணங்களில் கூறப்படுகிறது.

வீட்டில் பூஜை முடித்த பின் ஆலயம் சென்று ஐந்து நெய்தீபம் ஏற்றி வழிபாடு செய்தால் மன பயம் அகலும், மரண பயம் அகலும், கொடிய துன்பம் விலகும். ஆவணி மாத ஏகாதசி விரதத்தினை காய்கறிகளைப் பயன்படுத்தாமல் பழங்களை மட்டும் பயன்படுத்தி விரதமுறையை மேற்கொள்ள வேண்டும்.

-வித்யா ராஜா

Most Popular

கர்நாடகா இடைத்தேர்தல்.. அலட்டிக்கொள்ளாத பா.ஜ.க…. நெருக்கடியில் காங்கிரஸ் மற்றும் குமாரசாமி கட்சி

கர்நாடகாவில் நவம்வர் 3ம் தேதியன்று 2 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இடைத்தேர்தலில் வெற்றி பெற்றே தீர வேண்டும் என்ற நெருக்கடியில் காங்கிரசும், மதசார்ப்பற்ற ஜனதா தளம் கட்சியும்...

யோகி ஆதித்யநாத் அரசாங்கம் ஏழைகள் மற்றும் தலித்துகளுக்கு எதிரானது… திக்விஜய சிங் குற்றச்சாட்டு

உத்தர பிரதேச அரசு ஏழைகள் மற்றும் தலித்துகளுக்கு எதிரானது என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான திக்விஜய சிங் குற்றம்சாட்டினார். உத்தர பிரதேசத்தில் முதல்வர்...

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் நீதிமன்ற தீர்ப்பை வரவேற்கிறேன்… புதிதாக பிரச்சினை உருவாக்காதீங்க… இக்பால் அன்சாரி

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் அத்வானி உள்பட குற்றம் சாட்டப்பட்ட 32 பேரையும் விடுவித்த சி.பி.ஐ. நீதிமன்றத்தின் தீர்பை வரவேற்பதாக அயோத்தி நில வழக்கு தொடர்ந்தவர்களில் ஒருவரான இக்பால் அன்சாரி...

ரயில்களுக்கு ரெஸ்ட் கொடுத்த அரசு…. லாக்டவுனால் நஷ்டத்தை சந்தித்த ஐ.ஆர்.சி.டி.சி.

ஐ.ஆர்.சி.டி.சி. 2020 ஜூன் காலாண்டில் ரூ.24.60 கோடியை நிகர நஷ்டமாக சந்தித்துள்ளது. இந்திய ரயில்வேயின் துணை நிறுவனம் இந்தியன் ரயில்வே கேட்டரிங் அண்டு டூரிஸம் கார்ப்பரேஷன்...
Do NOT follow this link or you will be banned from the site!