தேனியில் காவல்துறை – துணை ராணுவம் சார்பில் கொடி அணிவகுப்பு!

 

தேனியில் காவல்துறை – துணை ராணுவம் சார்பில் கொடி அணிவகுப்பு!

தேனி

தேனியில் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு காவல்துறை மற்றும் துணை ராணுவம் சார்பில் கொடி அணிவகுப்பு பேரணி நடைபெற்றது.

தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்கவும், அவர்களது பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாகவும் தேனி மாவட்ட காவல்துறை சார்பில் இன்று கொடி அணிவகுப்பு நடைபெற்றது. தேனி நகரில் நடந்த இந்த அணி வகுப்பு நிகழ்ச்சியில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாய்சரண் தேஜஸ்வி தலைமையில் போலீசார் மற்றும் துணை ராணுவ படையினர் என 200-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

தேனியில் காவல்துறை – துணை ராணுவம் சார்பில் கொடி அணிவகுப்பு!

தேனி அல்லிநகரம் சாலை பிள்ளையார் கோவிலில் தொடங்கிய இந்த பேரணியானது, பழைய பேருந்து நிலையம் வழியாக மதுரை சாலையில் உள்ள பங்களாமேட்டில் சென்று நிறைவடைந்தது. தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி, சட்டம் மற்றும் ஒழுங்கு பிரச்சினைகள், கலவரங்கள், சமூக விரோத செயல்கள் போன்றவற்றை கட்டுப்படுத்த காவல்துறை எந்த நேரமும் விழிப்புடன் செயல்படுவதையும் வெளிப்படுத்தும் விதமாக இந்த அணி வகுப்பு நடைபெற்றது.

அத்துடன், பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்கவும், அவர்களது பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கிலும் இந்த அணிவகுப்பு நடைபெற்றது.காவல்துறையினர் மற்றும் துணை ராணுவத்தின் கொடி அணிவகுப்பு நிகழ்ச்சியை, அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் ஆர்வமுடன் கண்டு களித்தனர்.