‘ஆட்டோமேட்டிக் டிராபிக் சிக்னல்’ அசத்தும் தேனி மாவட்ட நிர்வாகம்!

‘ஆட்டோமேட்டிக் டிராபிக் சிக்னல்’ அசத்தும் தேனி மாவட்ட நிர்வாகம்!

தேனியில் நவீன முறையில் இயங்கக்கூடிய தானியங்கி டிராபிக் சிக்னல் மின்கம்பங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

‘ஆட்டோமேட்டிக் டிராபிக் சிக்னல்’ அசத்தும் தேனி மாவட்ட நிர்வாகம்!

தேனியில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருப்பதால், காவல்துறை தரப்பில் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது. ஆனால் மக்கள் அதனை முறையாக கடைபிடிக்காததால், விபத்துகளும் விதிமீறல்களும் அதிகளவில் நடந்து வருகின்றன. இதனைக் கட்டுப்படுத்தும் விதமாக தற்போது தானியங்கி டிராபிக் சிக்னல் கம்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன. சென்னைக்கு அடுத்து தற்போது தேனியில் தான் இந்த தானியங்கி டிராபிக் சிக்னல்கள் அமைக்கப்பட்டுள்ளன.

‘ஆட்டோமேட்டிக் டிராபிக் சிக்னல்’ அசத்தும் தேனி மாவட்ட நிர்வாகம்!

இதனை திண்டுக்கல் சரக டி.ஐ.ஜி முத்துசாமி துவக்கி வைத்தார். அதில் மஞ்சள், பச்சை, சிவப்பு ஆகிய நிறங்களை வாகன ஓட்டிகள் எளிதில் அடையாளம் கண்டு கொள்ளும் விதித்தில் பொறுத்தப்பட்டுள்ளது. சுமார் 7 லட்சம் மதிப்பிலான தானியங்கி சிக்னல்கள் தேனியின் 3 இடத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், வாகன ஓட்டிகள் முறையாக சிக்னலை கடைபிடிப்பார்கள் என்றும் விபத்துகள் குறையும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.